இலங்கை இனப்பிரச்சினை தீர உதவ தயார்: நட்வர் சிங்
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இந்தியா உதவத் தயார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் கூறினார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 9ம் தேதி இலங்கை சென்றார். அவர் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்கதிர்காமரை சந்தித்து பேசினார். பின் இந்திய-இலங்கை 6வது இணைக்கமிஷன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை விமானப் படையின் ரேடார் நெட்வொர்க்கின் தரத்தை உயர்த்த உதவ வேண்டும் என இந்தியாவுக்குசந்திரிகா அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதை மன்மோகன்சிங் அரசு ஏற்றுக் கொண்ட விபரத்தை சந்திப்பின்போது நட்வர்சிங் சந்திரிகாவிடம் கூறினார்.
பின்னர் நடந்த இலங்கை அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நட்வர் சிங் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமரசபேச்சுவார்த்தை முயற்சிக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
ஆனால் இதுபற்றி இலங்கை மக்களும், இலங்கை அரசியல் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றி தெளிவாக அறிவிக்க வேண்டும். அதன் பிறகு தான் இனப் பிரச்சினைக்குசமரச தீர்வு காணும் முயற்சிக்கு இந்தியா முழு ஆதரவு கொடுக்கும் என்றார்.
இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படை வெளியேறிய பிறகு அந்நாட்டின் இனப்பிரச்சினையில் நேரடியாகத் தலையிடாமல் இருந்து வந்த இந்தியா தற்போதுஅப்பிரச்சினைக்கு உதவத் தயார் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் ஜேவிபி கட்சி தலைவர்கள் சோமவன்சா, அமரசிங்கே, தில்வின் சில்வா, மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பெரில் ஷராப், டியுஎல்எப் தலைவர் ஆனந்தசங்கரே மற்றும் டிஎன்ஏ அமைப்பு தலைவர் சம்பந்தன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து நட்வர் சிங் பேசினார்.
மூன்று நாள் பயணத்தை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நட்வர்சிங் நேற்று இரவு டெல்லி திரும்பினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications