"திருட்டுப் போலீஸாருடன் அதிரடிப்படை எஸ்.ஐக்குத் தொடர்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

போலீஸ் முகமூடியுடன் கொள்ளையில் ஈடுபட்டு கோடிக் கணக்கில் சம்பாதித்துள்ள மதுரையைச் சேர்ந்த 3 போலீஸ்காரர்களுக்கும், வீரப்பனைப் பிடித்தஅதிரடிப்படையில் இடம் பெற்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை திருமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பன்னீர் செல்வம், பாஸ்கர், மீனாட்சி சுந்தரம் ஆகிய 3 போலீஸ்காரர்களும், சென்னையில் நகைக் கடைஊழியர்களிடம் 4 லட்சம் பணத்தை பறிக்க முயன்ற போது கைதாகினர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதன் மூலம் ரூ. 10 கோடி வரை இவர்கள் சம்பாதித்துள்ளதாக தெரிகிறது.

இவர்கள் குறித்து விசாரிக்க மதுரைக்கு தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர். அங்கு 3 போலீஸாரின் வீடுகளிலும் தனிப்படை போலீஸார் சோதனை நடத்தினர். சிலமாதங்களுக்கு முன்பு தான் மீனாட்சி சுந்தரத்திற்கு கல்யாணம் ஆனது. அப்போது கல்யாணத்திற்கு வந்தவர்கள் குறித்த தகவல்களையும் தனிப்படை போலீஸார்சேகரித்தனர்.

மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள 3 போலீஸாரின் வீடுகளிலும் சோதனை மற்றும் குடும்பத்தாரிடம் நடத்திய விசாரணையின் போது திடுக்கிடும் தகவல் ஒன்றும்தனிப்படையினருக்குக் கிடைத்தது.

வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டிருந்த அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், இந்த கொள்ளைப் போலீஸுக்கும் நெருங்கியதொடர்பு இருந்ததாகவும், கொள்ளைச் சம்பவங்களில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சப் இன்ஸ்பெக்டருக்கு, வீரப்பனைப் பிடித்ததற்குப் பரிசாக ரூ. 3 லட்சம் ரொக்கம், வீட்டு மனை, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு ஆகியவையும்வழங்கப்பட்டுள்ளதாம்.

இவர்கள் தவிர மேலும் சில போலீஸ்காரர்கள், சமூக விரோதிகள், ரவுடிகள், மதுரை நகைக் கடை பஜாரில் உள்ள சில தரகர்கள் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகதெரியவந்துள்ளது.

நகைக் கடைகளிலிருந்து நகை வாங்க பணத்துடன் சென்னைக்கு செல்லும் ஊழியர்களை குறி வைத்துத் தான் இந்த போலீஸ் கும்பல் கொள்ளை அடித்து வந்துள்ளது.இதற்கு சில நகைக் கடை தரகர்கள் தான் உதவியுள்ளனர்.

பணத்துடன் நகை வாங்க கிளம்புகிறார்கள் என்று முன் கூட்டியே திருட்டுப் போலீஸாருக்கு தகவல் கொடுத்து விடுவார்களாம் இவர்கள். இதையடுத்து லீவ் போட்டுவிட்டு கொள்ளையடிக்க கிளம்புமாம் இந்த போலீஸ் கும்பல்.

கொள்ளையடிக்கும் பணத்தில் வீடு வாங்குவது, ஜாலியாக டூர் போவது, மது அருந்துவது என அனுபவித்து வந்துள்ளனர். மதுரை தவிர கோவை, திருச்சி உள்ளிட்டபல்வேறு ஊர்களிலும் இந்தக் கும்பல் கைவரிசையைக் காட்டியுள்ளதாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், கைதாகியுள்ள மீனாட்சி சுந்தரம் தான், எஸ்.எஸ்.காலனியில் முன்பு உளவுப் பிரிவில் வேலை பார்த்தபோது சிவகாசி ஜெயலட்சுமிகுறித்த பல தகவல்களைத் திரட்டிக் கொடுத்தவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+