வீரப்பனின் மகள்களுக்கு சென்னை பள்ளியில் இடம் கிடைத்தது
சென்னை:
வீரப்பனின் மகள்களை சேர்த்துக் கொள்ள சென்னையிலுள்ள ஒரு பள்ளி சம்மதம் தெரிவித்துள்ளது. இருவரது படிப்புச் செலவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிதியுதவிகுவிந்து வருகிறது.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இவர்கள் இருவரையம் அந்த பள்ளிகள் வெளியேற்றி விட்டன.
கடந்த ஆண்டு இறுதித் தேர்வில் வித்யா ராணி, பிரபா ஆகிய இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த வருடம் இவர்கள் இருவரும் 9 மற்றும்8ம் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்.
ஆனால் எந்தப் பள்ளியிலும் இவர்களை சேர்க்க மறுத்தனர். வீரப்பனின் மகள்கள் என்று தெரிந்ததும் போலீஸாரால் ஏதும் பிரச்சினை வருமோ என பயந்து போய் பலபள்ளிகள் இருவரையும் சேர்க்க மறுத்தது.
இது குறித்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன் கூறுகையில், என்னுடைய 2 மகள்களையும் படிக்க வைக்க நான் போராடிக்கொண்டிருக்கிறேன். திருச்சி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல பள்ளிகளுக்கு சென்று நான் எனது மகள்களை சேர்த்துக் கொள்ளுமாறு கூறினேன்.
ஆனால் வீரப்பனின் மகள்கள் என்று தெரிந்த உடன் பள்ளிகளில் சேர்க்க பயப்படுகிறார்கள். என்னுடைய மகள்களின் எதிர்காலத்திற்கு நல்ல மனது படைத்தவர்கள்உதவ வேண்டும் என்றார்.
இந் நிலையில் வீரப்பனின் மகள்களின் பரிதாப நிலையை அறிந்த சென்னை புறநகரிலுள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடம் இருவரையும் தங்கள் பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளது.
இதையடுத்து அந்தப் பள்ளியில் இருவரும் சேர்ந்துள்ளனர். மூத்த மகள் வித்யா ராணி 9வது வகுப்பிலும், இளைய மகள் பிரபா 8வது வகுப்பிலும்சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரது பஐப்பிற்காக பலர் நிதியுதவி செய்ய முன் வந்துள்ளனர்.
தனது மகள்கள் இருவருக்கும் சென்னை பள்ளியில் இடம் கிடைத்துள்ளதால் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் சென்னையிலேயே தங்க முடிவெடுத்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications