நுழைவு தேர்வு ரத்து: எதிர்த்து 100 மாணவர்கள் வழக்கு
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ததை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீது நாளை விசாரணைக்கு வருகின்றன.
இந்த ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நடைபெறும். நுழைவுத் தேர்வும்,இம்ப்ரூவ்மென்ட் மதிப்பெண் முறையும் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இந் நிலையில் நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முறையை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
சென்னை, திருவண்ணாமலை, செய்யாறு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் இன்று நண்பகல் வரை அரசின்உத்தரவுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களில், அரசின் உத்தரவு நியாயமற்றது. சமமான மதிப்பெண் பெற்ற மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தகுலுக்கல் முறை நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை.
மேலும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முறை மிகச் சரியானது என்று உயர்நீதிமன்றம் 2முறை தீர்ப்பளித்துள்ளது. இந் நிலையில் அதையும் அரசு ரத்து செய்திருப்பது உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும். எனவே அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி தினகரன் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகின்றன.
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்காக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நுழைவுத் தேர்வை 1,40,000 பேரும், இம்ப்ரூவ்மென்ட் தேர்வை 5,000க்கும்மேற்பட்டவர்களும் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications