போலி வாக்காளர்கள்: டெல்லிக்கு கலெக்டர்கள் அறிக்கை- நரேஷ் குப்தா தகவல்
சென்னை:
வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ள தொகுதிகளில் விரைவில் மத்திய, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
மேலும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் அழைத்து வாக்காளர் பட்டியலில் சரியான பெயர்களை சேர்ப்பது, போலி வாக்காளர்களை சேர்த்தது, போலிவிண்ணப்பங்களை கொடுத்த கட்சிகளின் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த தமிழக தேர்தல் கமிஷனுக்குமத்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உட்பட 8 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் போலியாக வாக்காளர்களை சேர்த்த அதிகாரிகள் மற்றும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு நரேஷ் குப்தா கூறுகையில், மத்திய தேர்தல் கமிஷனர் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்காளர்பட்டியல் தொடர்பாக மத்திய தேர்தல் கமிஷனர் வழங்கிய ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தெரிவித்தேன்.
வாக்காளர் பட்டியலை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும் கூறினேன். தகுதியான மனுக்களை ஏற்கவும், போலியான மனுக்களை நிராகரிக்கவும்அறிவுறுத்தப்பட்டன.
விரைவில் மத்திய, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்ட தொகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்யும். விழுப்புரம், சேலம்மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த அறிக்கைகள் மத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அரசியல் கட்சிகளிடம் அளித்த வரைவு வாக்காளர் பட்டியலில் முகவரி இல்லை என்று கூறப்பட்டது. விரைவில் முகவரியுடன் வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications