புலிகள்: ஜேவிபிக்கு சந்திரிகா கண்டனம்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவிப்பது தவறு என்று ஜனதா விமுக்தி பிரமுனா கட்சிக்கு இலங்கைஅதிபர் சந்திரிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சந்திரிகா அரசுக்கு ஆதரவளித்து வரும் முக்கிய கட்சியான ஜனதா விமுக்தி பிரமுனா (ஜேவிபி) இந்த விவகாரத்தில் சந்திரிகா அரசுக்கு கடும் மிரட்டல் விடுத்துவருகின்றன. விடுதலைப் புலிகளுடன் இணைந்து நிவாரண உதவிகளை வழங்கினால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று அக்கட்சி கூறியது.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் ஜேவிபிக்கு 39 இடங்கள் உள்ளன. எனவே இக்கட்சி நினைத்தால் சந்திரிகா அரசை கவிழ்த்து விடலாம்.
இந் நிலையில் சந்திரிகா கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்கும் முடிவை எதிர்ப்பது தவறு. இதுநாட்டின் அமைதி மற்றும் முன்னேற்றத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு சமமாகும்.
அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக கூறுவது மிரட்டல் விடுக்கும் செயலாகும்.ஜேவிபியின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம்நலிவடைந்துள்ளது. பணவீக்க சதவீதம் 18.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜேவிபி ஆதரவளித்தால் பணவீக்கம் 10 சதவீதத்திற்குள் குறைந்து விடும் என்றார் சந்திரிகா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications