14 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ்
சென்னை:
சென்னை மாநகரைச் சேர்ந்த 14 காவல் நிலையங்கள் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளன.
செயிண்ட் தாமஸ் மவுண்ட், அடையார், தேனாம்பேட்டை, வடபழனி, வண்ணாரப்பேட்டை, மாதவரம், கொத்தவால்சாவடி,கொடுங்கையூர், அண்ணா நகர், ஜே.ஜே.நகர், எஸ்.ஆர்.எம்.சி போரூர், சிந்தாதிரிப்பேட்டை, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர்காவல் நிலையம், அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களுக்குத்தான் ஐ.எஸ்.ஓ. 9001:2000தரச் சான்றிதழ் கிடைக்கவுள்ளது.
அதேபோல, சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு மையம், மத்திய குற்றப் பிரிவு ஆகியவையும் ஐ.எஸ்.ஓ சான்றிதழுக்குப்பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த வார இறுதியில், ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் குழுவினர் இந்த காவல் நிலையங்களைப்பார்வையிடவுள்ளனர்.
காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கிடைக்க வேண்டுமானால் நிறைவேற்றப்பட வேண்டிய சில நிபந்தனைகள்:
காவல் நிலையங்கள் பொதுமக்கள் குறை தீர்ப்பு மையங்களாக செயல்பட வேண்டும். தங்களை அணுகும் பொதுமக்களுக்குத்தேவையான அனைத்து தகவல்களும் அங்கு வழங்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு அதுதொடர்பான ஒப்புகை அவர்களுக்கு உடனே வழங்கப்படவேண்டும்.
விசாரணை தொடர்பான விவரங்களை உடனுக்குடன் புகார்தாரர்களுக்கு வழங்க வேண்டும்.
தங்களை நாடி வருவோரை குடும்ப உறுப்பினர்களைப் போல கருதி பணிவுடனும், கனிவுடனும் காவல் நிலையத்தில்உள்ளவர்கள் நடத்த வேண்டும்.
புகார்களைப் பெறுவதற்கு வசதியாக காவல் நிலையத்தில் வரவேற்பு மையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
வரவேற்பு மையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். அங்கு இருப்பவர்கள் புகார் கொடுக்க வருவோர், தகவல் அறியவருவோரிடம் இன் முகத்துடன் பேசி அவர்களுக்க உதவ வேண்டும்.
பொது மக்கள் ஆலோசனை பெட்டி ஒன்றும் காவல் நிலையத்தில் வைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் தரும் ஆலோசனைகளைகாவல் துறையினர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் நிலையத்தில் தனியாக நேர்காணல் அறை அமைக்கப்பட வேண்டும். அங்கு வைத்துதான் புகார்தாரர்கள்,பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகப்படுபவர்கள், புகார் கூறப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும்.
விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் லாக் அப் அறைகள் அடிப்படை வசதிகள் (குடிநீர், கழிவறை) கொண்டதாக இருக்கவேண்டும்.
இத்தகைய தகுதிகள் இருக்கும் காவல் நிலையத்திற்குத்தான் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சான்றிதழ் பெறுவதற்காக இந்த வசதிகளை காவல் நிலையங்களில் உருவாக்கிவிட்டு, அடுத்த சில நாட்களிலேயே உண்மையானகலரை போலீசாரும் காவல் நிலையமும் காட்டாமல் இருக்கும் வரை நல்லது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications