கோவை குண்டுவெடிப்பு: விசாரணை அதிகாரி திடீர் சாவு
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி எஸ்பி முருகேஸ்வரன் திடீர் என மரணம் அடைந்தார்.
இந்த வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்தவர் முருகேஸ்வரன்.
கோவை வட வள்ளி பகுதியில் வசித்து வந்த முருகேஸ்வரன், திங்கள்கிழமை காலை தனது வீட்டில் இருந்து போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள தனதுஅலுவலகத்திற்கு ஜீப்பில் வந்தார். ஜீப்பிலிருந்து இறங்க அவர் எத்தனித்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்தார்.
உடனடியாக அவரை அதே ஜீப்பில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மரணமடைந்தார்.
மிகவும் திறமை வாய்ந்த அதிகாரியாக விளங்கியவர் முருகேஸ்வரன். சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான இமாம்அலியை முருகேஸ்வரன் தலைமையிலான தனிப்படையினர்தான் கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு டி.எஸ்.பியாக இருந்த அவர் கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றார்.
2001ம் ஆண்டில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் கோவை குண்டுவெடிப்பு வழக்கை அவர் தான் விசாரித்துவந்தார்.
முருகேஸ்வரன் உடலுக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. சுப்பிரமணியம், கோவை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications