சிறுவனுடன் பாலியல் உறவு: மைக்கேல் ஜாக்ஸன் விடுதலை
சான்டா மரியா (கலிபோர்னியா):
சிறுவனுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் விடுவிக்கப்பட்டார்.
ஆர்விகோ என்ற 13 வயது சிறுவனுடன் பாலியல் உறவு கொண்டதாக பிரபல பாப் பாடகரான மைக்கேல் ஜாக்ஸன் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2003ம் ஆண்டுகலிபோர்னியாவிலுள்ள சான்டா மரியா நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மைக்கேல் ஜாக்ஸன் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாக்ஸன் மீது 10 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. புகார் கூறிய சிறுவன் ஆர்விகோ, அவனது தாய் உட்பட மொத்தம் 140 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.இந்த வழக்கில் 600 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜாக்ஸனுக்கு ஆதரவாக முன்னாள் நடிகை எலிசபெத் டெய்லர் சாட்சியம் அளித்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை கேட்பதற்காக மைக்கேல் ஜாக்ஸன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
வழக்கை விசாரித்த 12 பேர் கொண்ட நீதிபதிகள் குழு, ஜாக்ஸன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஜாக்ஸனைவிடுவிப்பதாக நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த மைக்கேல் ஜாக்ஸன் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்து கையசைத்து தனதுமகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications