ஆண்டிப்பட்டியில் நெசவுப் பூங்கா: ஜெ. அடிக்கல்

Subscribe to Oneindia Tamil

தேனி:

தேனி மாவட்டத்தில் ஜூன் 16ம் தேதி சுற்றுப் பயணம் செய்யும் முதல்வர் ஜெயலலிதா, ஆண்டிப்பட்டியில் அமையவுள்ள ஹைடெக் நெசவுப்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா வரும் 16ம் தேதி தேனி மாவட்டத்தில் பல்வேறுநலத் திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைக்கவுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக ஆண்டிப்பட்டியில் அமையவுள்ள ஹை டெக் வைகை நெசவுப் பூங்காவுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 33 கோடிமதிப்பிலான திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

2008 பேருக்கு ரூ. 1.49 கோடி மதிப்பிலான உதவிகளை அவர் வழங்குகிறார். அதேபோல சமூக நலத்துறையின் கீழ் 374 பேருக்கு ரூ. 28.68கோடியிலான உதவிகளையும் அவர் வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை விரைவுப்படுத்தவுள்ள ஜெயலலிதா, ஆண்டிப்பட்டியில் மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் பயணம் செய்து ஏராளமானவளர்ச்சித் திட்டப் பணிகளைத் துவக்கி வைக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+