பிறர் உழைப்பில் தம்பட்டம்: கருணாநிதி மீது ஜெ பாய்ச்சல்
சென்னை:
சென்னை அருகே அதி நவீன மோட்டார் வாகன பரிசோதனை மையத்தை அமைப்பது தொடர்பாக தான் எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்கப்போகும் நிலையில், அதே விஷயம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி பெயரைத் தட்டிப் போக பார்க்கிறார் கருணாநிதி என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மேலும், சென்னை அருகே அசோக் லேலண்ட், டி.வி.எஸ். மோட்டார்ஸ், ஹூண்டாய், போர்டு, மிட்சுபிஷி உள்ளிட்ட பல்வேறு மோட்டார் கார்தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் இருப்பதையும், எனவே இந்த மையத்தை சென்னையில் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் எனதுகடிதத்தில வலியுறுத்தியிருந்தேன்.
மேலும் கடந்த ஏப்ரல் 13ம் தேதி என்னை சந்தித்த கார்ப் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனிடம் இதுகுறித்து விரிவாக விவாதித்தேன். இப்படி நான்எடுத்த நடவடிக்கையின் பயனாக, சென்னை அருகே இந்த மையத்தை அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக மத்திய கனரகபோக்குவரத்துத் துறை இணை அமைச்சர் எனக்கு கடந்த 13ம் தேதி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், புதிய உத்தேசத் திட்டத்தின்படி வட இந்தியாவில் ஒரு மையமும், தென்னிந்தியாவில் ஒரு மையமும், புனேவில் தற்போதுள்ளமையத்தை நிலை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த மையங்களை அமைப்பது தொடர்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களை திட்ட ஒருங்கிணைப்பு தொழில்நுட்பக் குழு சமீபத்தில்பார்வையிட்டது.
இவ்வளவு நடந்தபோதும், இத்தனை காலமும் இதுகுறித்து சற்றும் சிந்தனை இல்லாமல், மையத்தை இங்கே அமைப்பதற்கு தேவையான, ஆதரவானஎந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த கருணாநிதி, எனது முயற்சிகளைத் தெரிந்து கொண்டு, அதே பிரச்சினை தொடர்பாக பிரதமருக்கு கடிதம்எழுதியுள்ளார்.
தமிழ்நாடு தொடர்பான திட்டங்களில் தான் மட்டுமே அக்கறை கொண்டவர் போல தோற்றம் ஏற்படுத்த கருணாநிதி முயல்கிறார். பிறர் உழைப்பால்கிடைத்த வெற்றியை தனது வெற்றி போல கருணாநிதி தம்பட்டம் அடித்துக் கொள்வது புதிதல்ல.
இத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மீண்டும் இன்று கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications