மதுரை திருட்டு போலீஸார் வாங்கி குவித்த சொத்துக்கள்!
மதுரை:
கொள்ளையர்களாக மாறிய 3 மதுரை போலீஸாரின் சொத்துக்கள் குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள்ரூ. 10 கோடிக்கும் மேல் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னையில் நகைக் கடை ஊழியர்களிடம் ரூ. 4 லட்சம் பணத்தை வழிப்பறி செய்ய முயன்று சிக்கிக் கொண்ட மதுரை திருமங்கலம் காவலர்கள்பாஸ்கரன், மீனாட்சி சுந்தரம், பன்னீர் செல்வம் ஆகியோர் பல காலமகவே கொள்ளைத் தொழிலில் படு தீவிரமாக இருந்தவர்கள் என்ற தகவல்தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இந்த திருட்டு போலீஸாரின் முந்தைய கால நடவடிக்கைகளை தீவிரமாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸார்மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள 3 பேர்களின் வீடுகளிலும் நீதிமன்ற அனுமதியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல ஆவணங்கள்சிக்கின.
இதன் மூலம் 3 பேருக்கும் ஏராளமான சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. வீடுகள், சொகுசு பங்களாக்கள், நிலங்கள் என ரூ.10 கோடிக்கும்மேல் கொள்ளையடித்த பணத்தில் வாங்கிக் குவித்துள்ளனர் 3 போலீஸாரும்.
இந் நிலையில், இவர்களது பெயர்களில் உள்ள பங்களாக்கள், நிலங்கள் சிலவற்றின் முக்கிய பத்திரங்கள் கிடைக்கவில்லை. இவற்றை அவர்கள்பதுக்கியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இவற்றைக் கண்டுபிடிக்கவும், 3 பேரின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் விசாரணை நடத்தி இவர்களது பெயர்களில் உள்ள சொத்துக்கள் குறித்து கண்டுபிடிக்கவும் போலீஸார்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே 3 திருட்டுப் போலீஸாரையும் இன்று மாலை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகிறார்கள். அப்போதுஇவர்களை காவலில் எடுக்கக் கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. போலீஸ் காவலில் எடுத்து இவர்களை விசாரித்தால் மேலும்பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என போலீஸார் நம்புகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications