ஜெவை சந்திக்க ராமதாஸ் திட்டம்? உளவுத்துறை பரப்பும் புருடா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் ராமதாஸும், தானும் சந்திக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை, தமிழக உளவுப் பிரிவு பரப்பியுள்ள வதந்தி என அகில இந்திய மூவேந்தர் மூன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் சேதுராமன், திருமாவளவன் ஆகிய மூன்று அரசியல் கட்சித் தலைவர்களும் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுடன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பல்வேறு தமிழர் தலைவர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சேதுராமனிடம் கேட்டபோது, இந்த செய்தியே பொய்யானது. நாங்கள் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருவதால் எங்களைப் பிரிக்க ஜெயலலிதா சதி செய்கிறார்.
அதற்கு தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு போலீஸார் மிகத் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். அதன் விளைவுதான் இந்த வதந்தி. இதில் சற்றும் உண்மையில்லை. இது போலீஸ் வேலை.
என்னைப் பலிகடாவாக்கி கூட்டணியை உடைக்க நினைக்கிறார்கள். அது பலிக்காது. எங்களைப் பிரிக்க முடியாது. கடந்த 5 வருடங்களாக நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கியவர் கருணாநிதிதான்.
எங்களுக்கு இதயத்தில் மட்டும் இடம் கொடுப்பதாக கருணாநிதி கூறிய நிலையிலும் கூட தொடர்ந்து அவருடன்தான் இருந்து வருகிறோம்.
பலம் வாய்ந்த கூட்டணியாக திமுக கூட்டணி திகழ்வதால்தான் அதை உடைக்க வதந்திகளை பரப்பி வருகிறது உளவுப் போலீஸ்.
ஜெயலலிதாவை சந்திக்க நாங்கள் நேரம் கேட்கவே இல்லை. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஏதாவது கோரிக்கை இருந்தாலும் கூட நாங்கள் ஜெயலலிதாவை சந்திக்கப் போக மாட்டோம்.
திருமாவளவனைத் தான் அனுப்பி வைப்போம். நாங்கள் திமுக கூட்டணியிலிருந்து விலக மாட்டோம். அப்படி ஒரு எண்ணமே எங்களுக்கு இல்லை என்றார் சேதுராமன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications