சாலைப் பணியாளர்கள் சங்கத்தில் பிளவு?
சென்னை:
10,000 சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக் கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம்நடக்கவுள்ளது.
இந் நிலையில் இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க அதிமுக சதி செய்வதாக தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் சித்தையன்கூறியுள்ளார்.
இந் நிலையில் சாலைப் பணியாளர்களுக்கிடையே தமிழக அரசு பிளவை ஏற்படுத்த முயலுவதாகவும், அதன் மூலம் போராட்டத்தை முறியடிக்கமுயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சாலைப் பணியாளர் சங்கத் தலைவர் சித்தையன் கூறுகையில்,
இந்தப் போராட்டம் எங்களுக்காக நடக்கிறது. ஆனால் எங்களுக்குள் பிளவை ஏற்படுத்தி இப் போராட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வதைத் தடுக்கதமிழக அரசும், அதிமுக தலைமையும் முயல்கின்றன.
சங்கத்தில் பிளவு ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இப் போராட்டத்தில்கலந்து கொள்ள வேண்டும் என்றார் சித்தையன்.
அம்மாவே சரணம்: இன்னொரு தலைவர்
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர்கள் சங்கத் தலைவர் சண்முகராஜா அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், 10,000 சாலைப் பணியாளர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். நீதிமன்றங்கள், போராட்டங்கள் மூலம்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை விட தாயுள்ளம் கொண்ட முதல்வர் ஜெயலலிதாவினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு சுமூகத் தீர்வை அறிவிக்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம்.
எங்கள் மீது கருணை கொண்டு மீண்டும் பணி வழங்கி எங்களது வாழ்வில் முதல்வர் ஒளியேற்ற வேண்டும். மீண்டும் வேலை தந்தால் அந்த நன்றியைஎன்றென்றும் மறக்க மாட்டோம். எதிர்க் கட்சிகளின் போராட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் சாலைப் பணியாளர்கள் சங்கத்தை அதிமுக அரசு உடைத்துவிட்டது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications