பி.இ. சேர்க்கை: 4 இடங்களில் கவுன்சிலிங்
சென்னை:
இந்த ஆண்டு நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க 4 நகர்களில் கவுன்சிலிங் நடக்கவுள்ளது.
பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதியுடைய மாணவ, மாணவர்களிடம் கவுன்சிலிங் நடத்தப்பட்டு கல்லூரிகளில் சேரஅனுமதி வழங்கப்படும்.
இதன் பின்னர் கவுன்சிலிங் நடக்கும். இது சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகர்களில் மட்டுமே நடக்கவுள்ளதாகத் தெரிகிறது.
கவுன்சிலிங்குக்கு வரும் மாணவர்கள் ரூ. 5,300க்கு டிடி எடுத்து வர வேண்டும். இதில் ரூ. 300 கவுன்சிலிங் கட்டணமாக எடுத்துக் கொள்ளப்பட்டு மீதமுள்ள ரூ. 5,000அவர்கள் சேரும் கல்லூரியில் கட்டணமாக வரவு வைக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவ, மாணவிகள் ரூ. 1,150க்கு மட்டும் டிடி எடுத்து வந்தால் போதுமானது என அரசு அறிவித்துள்ளது.
நுழைவுத் தேர்வு ரத்து: 22ல் விசாரணை
இதற்கிடையே நுழைவுத் தேர்வு ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் குறித்து 22ம் தேதியே இறுதிக் கட்ட விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளதை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், இந்த வழக்குகளைதலைமை நீதிபதி கட்ஜூ தலைமையிலான முதலாவது பெஞ்சுக்கு மாற்றினார். விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந் நிலையில் மாணவர் ஒருவர் பொது நல மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, நீதிபதி இப்ராகிம் கலிமுல்லாஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நளினி சிதம்பரம், நுழைவுத் தேர்வு அடிப்படையில் ஒரு ரேங்க் பட்டியல், அது இல்லாமல் ஒரு ரேங்க் பட்டியலைஅரசு தயார் செய்ய வேண்டும். அப்போது பாதிக்கப்பட்டோர் யார் என்பது தெரிந்து விடும். அதன் அடிப்படையில் எந்த முறையைக் கையாளுவது என்பதை முடிவுசெய்யலாம் என்று வாதிட்டார்.
அவரது வாதத்தைக் கேட்ட பிறகு நீதிபதிகள், இந்த வழக்குகள் குறித்து திட்டமிடப்பட்ட 23ம் தேதிக்குப் பதில் ஒரு நாள் முன்பாக அதாவது 22ம் தேதியே இறுதிக் கட்டவிசாரணை நடத்தப்படும். மதுரை கிளையில் இதுதொடர்பாக தாக்கலாகியுள்ள மனுக்களை சென்னைக்கு மாற்ற வேண்டும்.
இந்த வழக்குகளை விசாரித்து உடனடியாக தீர்ப்பு கூறுவதற்கு ஏதுவாக அரசுத் தரப்பு ஒத்திவைப்பு கோராமல் ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications