கலையப் போகும் இந்திரா காந்தியின் கனவு!
ஊட்டி:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கனவுத் திட்டமாகத் தொடங்கப்பட்ட ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்நிறுவனம் மூடப்படுவது உறுதியாகி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் பெரும்கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனால், புகைப்படச் சுருள்கள் இறக்குமதி ஆரம்பித்து கோடாக் உள்ளிட்ட சர்வதேச பிராண்டுகள் இந்தியாவில் புகுந்த பின்னர்இந்துவுக்கு மவுசு குறையத் தொடங்கியது.
இதையடுத்து இந்த நிறுவனம் பெரும் சரிவைக் காணத் தொடங்கி, கடந்த 1996ம் ஆண்டில் இந் நிறுவனத்தை நலிவடைந்தநிறுவனமாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து நிறுவனத்தின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி வந்தன.
இந் நிலையில், கடும் நஷ்டம் காரணமாக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அனைவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
எச்.பி.எப். நிறுவனத்தை மூடக் கூடாது என்று அதில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதுதொடர்பாக பல கட்டங்களாக போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்திய அமைச்சர்களும் இந்த விஷயத்தில் தங்களுக்கு ஆதரவாக இல்லை என்று தொழிலாளர்கள்குமுறல் தெரிவித்துள்ளனர். இந் நிலையில், எச்.பி.எப். நிறுவனத்தை மூடி விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள்வெளியாகின்றன.
நஷ்டம் கட்டுக்கடங்காமல் போய் விட்ட காரணத்தினாலும், புகைப்படச் சுருளுக்கு எதிர்காலம் சிறப்பாக இல்லை என்பதாலும்,இந்த நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்து விட்டதாகத் தெரிகிறது.
இந்த செய்தி எச்.பி.எப். ஊழியர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. தங்களது எதிர்காலம் குறித்து அவர்கள் பெரும் அச்சம்தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வேலை போய் விட்டதே என்ற அதிர்ச்சியில் 11 தொழிலாளர்கள் மாரடைப்பால் இறந்துபோயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications