காபிக்கு தமிழா?: இளங்கோவன் கிண்டலுக்கு பாமக கண்டனம்
சென்னை:
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் குறித்து மத்திய அமைச்சர் இளங்கோவன் விமர்சித்துப் பேசியதற்கு, பாமக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எதற்கெடுத்தாலும் தமிழ், தமிழ் என்று பேசிக் கொண்டிருக்காமல் உலகத்தின் போக்குக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என இளங்கோவன் கூறியிருந்தார்.சைக்கிளிலும் காபிக்கும் தமிழப் பெயர் கண்டுபிடிக்கும் வேலையை விட்டுவிட்டு கம்ப்யூட்டர் கற்கவும், கிராமங்களில் தொழில் தொடங்கவும் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்றார்.
மேலும் சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அது எந்தப் பெயரில் வந்தால் என்ன?. அதைத் தடுப்பது காட்டுமிராண்டித்தனம் என்றும் கூறினார்.
இளங்கோவனின் இந்தப் பேச்சு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் உள்ள முக்கிய கட்சியான பாமகவை உசுப்பி விட்டுள்ளது. அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணிகூறுகையில்,
தாய் மொழியான தமிழைப் படிக்கச் சொல்வதை காட்டுமிராண்டித்தனம் என்கிறார் இளங்கோவன். கர்நாடகத்தில் போய் கன்னடத்தை இப்படித் தரக்குறைவாகயாராவது பேசிவிட்டுத் திரும்ப முடியுமா?
ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்று யார் சொன்னது. நாங்கள் தமிழோடு ஆங்கிலத்தையும் தான் படிக்கச் சொல்கிறோம். நாங்கள் எதிர்ப்பது தமிழ் புறக்கணிப்பைமட்டும் தான். உலகின் தலை சிறந்த மொழிகளில் ஒன்று தமிழ்.
எல்லா இடங்களிலும் தாய் மொழி கட்டாயமாகியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழையே படிக்காமல் ஒருவர் பட்டப் படிப்பையே முடித்துவிட முடியும்என்ற கேடுகெட்ட சூழல் நிலவுகிறது. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆங்கிலத்துடன் தமிழுக்குப் பதிலாக பிரஞ்சு, ஜெர்மன், சீன மொழிகளை எடுத்துப் படிக்கிறார்கள்.
இவர்கள் தங்கள் குழந்தைகளையும் தமிழ் படிக்கச் செய்வதில்லை. தாய் மொழியையே மறக்கடித்துவிடுகிறார்கள். இந்த தாய் மொழிக் கொலையைத் தான் தடுக்கநினைக்கிறோம்.
சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் பெயரே இல்லை என்று இளங்கோவன் சொல்கிறார். நாங்கள் 3 லட்சம் தமிழ் கலைச் சொல் அகராதியைஉருவாக்கியிருக்கிறோம். தமிழறிஞர் மணவை முஸ்தபா 5 லட்சம் தமிழ் வார்த்தை அகராதியை உருவாக்கித் தந்திருக்கிறார்.
இதற்கு மேல் இளங்கோவனுக்கு என்ன வேண்டும். அவரது பேச்சு ஏற்கத்தக்கது அல்ல என்றார் மணி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications