சேது சமுத்திர தொடக்க விழா: தயாராகிறது தூத்துக்குடி
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழா அடுத்த மாத வாக்கில் நடைபெறும் எனத் தெரிகிறது. இது தொடர்பான ஏற்பாடுகளில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம்தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ராமநாதபுரம், மண்டபம், பாம்பன், தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்கள் விழா நடத்த பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் தூத்துக்குடியில் விழாவை நடத்த தற்போது முடிவுசெய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் அருகே அமைந்துள்ள கடற்கரையில் விழாவை நடத்த ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. பாரதி நகர் கடற்கரை என்றுஅழைக்கப்படும் அப்பகுதி 1800 மீட்டர் பரப்பளவு கொண்டது. கடற்கரைக்கு அருகேயே தூத்துக்குடி துறைமுக விருந்தினர் மாளிகையும் அமைந்துள்ளது. எனவேவிழாவுக்கு வரும் முக்கியப் பிரமுகர்கள் இங்கேயே தங்கிக் கொள்ள முடியும்.
கடற்கரைப் பரப்பை சமப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில் பிள்ளைநினைவு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் 3 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தொடக்க விழாவுக்கு வரவுள்ளதால், பாதுகாப்புஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications