மயூரி @
சென்னை:
பிரபல தமிழ் துணை நடிகை ஷாலினி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாததால்தற்கொலை செய்வதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இவரது தற்கொலைக்கு காதல் தோல்வி காரணமா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாண்டியராஜன் நடித்த கும்பகோணம் கோபாலு என்ற படத்தில் மயூரி என்ற பெயரில் அறிமுகமானவர் தான் இவர். இவரதுசொந்தப் பெயர் ஷாலினி. பிறகு மயூரி என்ற பெயர் ராசியாக இல்லாததால் தனது சொந்தப் பெயரையே வைத்துக் கொண்டார்.
பின்னர் ஷாலினி என்ற பெயரிலேயே சிம்புவின் மன்மதன், 7 ஜி ரெயின்போ காலனி, விசில், கனா கண்டேன் ஆகிய படங்களில்துணை நடிகையாக நடித்தார். ஏராளமான மலையாளப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
ஷாலினியின் வீடு சென்னை அண்ணா நகரில் உள்ளது. நேற்று பகல் 2 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அறிந்ததும் அண்ணா நகர் போலீஸார் விரைந்து சென்று ஷாலினியின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஷாலினி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம்இல்லை என்றும் வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாததால் தற்கொலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு வேறு யாரும்காரணம் அல்ல என்று எழுதி வைத்துள்ளார். அதேபோல தனது அண்ணனுக்கு அவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில்,அப்பா,அம்மாவைப் பார்த்துக் கொள் என்று எழுதியுள்ளார்.
ஷாலினிக்கு சமீப காலமாக அதிக அளவில் பட வாய்ப்புகள் இல்லை. காதலிலும் அவர் தோல்வியுற்றதாகத் தெரிகிறது.
ஷாலினியின் சகோதரர் நத்தின் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அவரது பெற்றோர் குமார், சாந்தி ஆகியோர்ஷாலினியுடன்தான் தங்கியிருந்தனர். ஷாலினியின் தற்கொலை குறித்து அண்ணா நகர் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications