ஜெ. காரை வழி மறிக்க பொதுமக்கள் முடிவு!
சென்னை:
சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் முதல்வர் ஜெயலலிதாவின் காரை வழிமறிப்போம் என பொது மக்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இந் நிலையில் கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகளுக்கு ஒரு நாள் கெடுவிதித்துள்ளனர்.
அதற்குள் தீர்க்காவிட்டால் ஜெயலலிதாவின் காரை வழிமறித்துப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை இப்பகுதி பொது மக்கள் பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நாளைக்குள்(வெள்ளிக்கிழமைக்குள்) உங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அதிகாரிகள் அவர்களுக்கு உறுதியளித்தனர்.
இதையடுத்து நாளைக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக முதல்வர் ஜெயலலிதா தனது சிறுதாவூர் பங்களாவுக்குசெல்லும்போது சாலை மறியல் போராட்டம் நடத்தி ஜெயலலிதா காரை வழிமறிப்போம் என மக்கள் எச்சரித்துவிட்டு அந்த மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
கொட்டிவாக்கம் பகுதி மக்களின் எச்சரிக்கையால் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications