இது தான் எனது அன்னை இல்லம்: ஆண்டிப்பட்டியில் ஜெ பேச்சு
தேனி:
ஆண்டிப்பட்டி மக்களின் இதயத்திலிருந்துதான், நான் ஆட்சி நடத்துகிறேன் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தனது தொகுதியான ஆண்டிப்பட்டிக்கு இன்று காலை சென்றார். மதுரை வரை தனி விமானத்தில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஆண்டிப்பட்டி சென்றஜெயலலிதா, அங்கு ரூ. 210 கோடி மதிப்புள்ள திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், நான் கோட்டையிலிருந்து ஆட்சி நடத்தவில்லை. ஆண்டிப்பட்டி மக்களின் இதயத்திலிருந்துதான் ஆட்சி நடத்துகிறேன். நான்இருப்பது வேண்டுமானால் சென்னையாக இருக்கலாம். ஆனால் எனது அன்னை ஆண்டிப்பட்டிதான். இதுதான் எனது அன்னை இல்லம்.
விசைத் தொழில் மேம்பாட்டுக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக ஆண்டிப்பட்டியில் உயர் தொழில்நுட்ப வைகை நெசவுப் பூங்கா அமையவுள்ளது. இதற்காகஇன்று அடிக்கல் நாட்டியுள்ளேன்.
இப்பகுதி நெசவாளர்கள் முன்னேற்றத்திற்காக, 1,500 நெசவாளர்களுக்கு ரூ. 1.80 கோடி மதிப்பில், மேம்படுத்தப்பட்ட இலவச விசைத்தறிகள் வழங்கப்படும்.
பின் தங்கிய மாவட்டமாக இருந்த தேனி இப்போது பலதுறைகளிலும் முன்னேறிய மாவட்டமாக மாறியுள்ளது. கல்வி அறிவிலும் தேனி மாவட்டம் அபரிமிதமானவளர்ச்சியைப் பெற்றுள்ளது.
தேனியில் எனது உத்தரவின் பேரில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது. அதன்படி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு என்னால்தொடங்கி வைக்கப்பட்டது. இப்போது அந்த மருத்துவமனை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு தினசரி 1,000 புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச்செல்கின்றனர்.
அதேபோல மருத்துவக் கல்லூரியும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 100 மாணவர்கள் அங்கு கல்வி கற்பிப்பதற்கான வசதிகள் உள்ளன. மாணவ, மாணவியர் தங்குவதற்காகவிடுதியும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்படி அனைத்து வசதிகளும் செய்யப்பட்டும் கூட இந்திய மருத்துவக் கவுன்சில், மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அனுமதி மறுத்து வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தும் இந்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்கித் தர முடியாமல் இருப்பது தேனி மாவட்ட மக்களுக்குச்செய்யும் அநீதியாகும்.
இந்த விஷயத்தில் அரசியல் நுழைவதை நான் விரும்பவில்லை. எனவே இங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், இந்த கூட்டத்தின் வாயிலாக,அந்த 12 அமைச்சர்களையும் நான் கேட்டுக் கொள்வது, தேனி மருத்துவக் கல்லூரிக்கு உரிய அனுமதியைப் பெற முயற்சியுங்கள்.
இந்த மாவட்ட மக்களுக்கு பயனளிக்கப் போகும் மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுங்கள் என்று பேசினார் ஜெயலலிதா.
முன்னதாக மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்திருந்த பல்வேறு வகையான பொருட்களை ஜெயலலிதா பார்வையிட்டார். அவற்றிலிருந்து சில பொருட்களைப்பணம் கொடுத்தும் வாங்கினார்.
விழா பந்தலில் தீ
முன்னதாக ஜெயலலிதா கலந்து கொண்ட விழாப் பந்தலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன் போடப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் நேற்றிரவு திடீரென தீப் பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்களும், அதிமுகவினரும் சேர்ந்து தீயை போராடி அணைத்தனர். தீயால் கருகிய பந்தலை மாற்றி புதிய பந்தல்போடப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications