சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்: ஜெயேந்திரர் ஆஜர்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உட்பட குற்றம் சாட்டப்பட் 22 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவிசுப்பிரமணியன் அப்ரூவரானார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த மே மாதம் 27ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அன்று ஜெயேந்திரர் உட்பட அனைவரும் ஆஜராகினர்.
பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு நீதிபதி அக்பர் அலி தள்ளிவைத்தார்.
இதன்படி இன்று வழக்கு விசாரணை தொடங்கியது. இதையொட்டி இன்று ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 22 பேர்செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ரகு மற்றும் சுந்தரேச அய்யர் ஆகியோர் ஆஜகாவில்லை.
இன்று முதல் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.
விஜயேந்திரருக்கு முன் ஜாமீன்:
இதற்கிடையே சங்கரமட கணக்குகளை திருத்திய வழக்கில் விஜயேந்திரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுமீதான விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அக்பர் அலி,விஜயேந்திரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் .
"லகு கும்பாபிஷேகம்:
இதற்கிடையே காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஜெயேந்திரர் முன்னிலையில் லகு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
மஹா கும்பாபிஷேகம் என்பது பிரமாண்டமான முறையில் நடத்தப்படுவது. அந்த அளவுக்கு பெரியதாக இல்லாமல், மிகவும் எளிமையாக நடத்தப்படும்கும்பாபிஷேகத்திற்கு "லகு கும்பாபிஷேகம் என்று பெயர். இது ஒரே நாளில் நடந்து முடியும்.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனுக்கு இத்தகைய "லகு கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள்நடக்கவுள்ளது. ஜெயேந்திரர் முன்னிலையில் இந்த கும்பாபிஷேகம் நடக்கிறது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சங்கர மட நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications