எனக்கு நீ வேணும்... இப்படியும் ஒரு காதல்!
சென்னை:
தீவிரமாக காதலித்த நபர் கல்யாணமாகி சென்ற பிறகும், அவரை விடாமல் துரத்தி, துரத்தி காதலித்த பெண், போலீஸில் புகார் செய்த பின்னர் தனது விரட்டலை விட்டார்.
இது குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிடைத்த தகவல்:
பொறியாளர் மீது அந்தப் பெண்ணுக்கு தீவிரக் காதல் ஏற்பட்டுள்ளது. தனது காதலை அவரிடம் அப்பெண் கூறியுள்ளார். ஆனால் அதை பொறியாளர் நிராகத்து விட்டார்.இருப்பினும் அப்பெண் விடாமல் அவரை துரத்தி துரத்தி தனது காதலைக் கூறி, தன்னுடன் சந்தோஷமாக இருக்குமாறும் கூறி வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பொறியாளர் தனது வீட்டில் பெண் பார்க்கச் சொல்லி கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் இந்தக் கல்யாணத்தால் அப் பெண்சோர்ந்து போய் விடவில்லை. தொடர்ந்து பொறியாளரை சுற்றிச் சுற்றி வந்துள்ளார்.
இதனால் குழப்பமடைந்த பொறியாளர், அப்பெண்ணை அழைத்து எனக்குக் கல்யாணமாகி விட்டது. நீயும் யாரையாவது கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாகஇரு என்று அட்வைஸ் செய்துள்ளார்.
ஆனால் அந்தப் பெண்ணோ, நான் உன்னைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன், உன்னுடன்தான் சந்தோஷமாக இருப்பேன் என்று பிதற்றவே பொறியாளர்அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
அந்தப் பெண்ணின் தொல்லை இடைவிடாமல் அதிகரிக்கவே அலுவலகத்திற்கு விடுப்புப் போட்டு விட்டார் பொறியாளர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பண்,நேராக அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பொறியாளரின் மனைவி மட்டும் இருந்துள்ளார்.
அவடரிம், உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். உனது கணவரை என்னிடம் விட்டுக் கொடுத்து விடு என்று கூறியுள்ளார். இதனால்அதிர்ச்சியடைந்த பொறியாளரின் மனைவி இதுகுறித்து கணவர் வந்தவுடன் கூறியுள்ளார்.
இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் பெரிய பிரச்சினையாகி விடும் என்று முடிவெடுத்த பொறியாளர், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார்.
விநோதமான புகாராக இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்ட இன்ஸ்பெக்டர் வசந்தி, சம்பந்தப்பட்ட பெண்ணுடன் செல்போனில் பேசி காவல் நிலையத்திற்கு வருமாறுகூறியுள்ளார். ஆனால் திடீர் திருப்பமாக, ஸாரி, இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறி விட்டு அப்பெண் செல்போனை ஆப் செய்துள்ளார்.
இதையடுத்து இத்துடன் பிரச்சினையை முடித்துக் கொள்ளுமாறு இரு தரப்பையும் அட்வைஸ் செய்து அனுப்பியுள்ளனர் போலீசார்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் நலன் கருதி அவரது பெயரையும், புகார் கொடுத்தவரின் பெயரையும் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வெளியிடவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications