பக்குவமில்லாத இளங்கோவன்: ராமதாஸ் பாய்ச்சல்
கும்பகோணம்:
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளம்பரத்திற்காக, பக்குவமின்றி, பொறுப்பின்றி பேசி வருகிறார். அதைப்பொறுத்துக் கொள்ள முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையடுத்து இளங்கோவனை கடுமையாக சாடினார் பாமக தலைவர் ஜி.கே.மணி.
இந் நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
இளங்கோவன் சில நேரங்களில் பரபரப்புக்காகவும், பத்திரிக்கை விளம்பரத்திற்காகவும், இப்படிப் பொறுப்பின்றி,பக்குவமின்றி பேசுவார்.
டெல்லியில் உள்ள உத்யோக் பவன், கிரிஷி பவன், நிர்மான் பவன், சன்சார் பவன் ஆகியவற்றின் பெயர்களைஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்று இவர் கூறினால், அடுத்த விமானத்தில் ஏற்றி தமிழகத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.
தமிழ்நாட்டில்தான் தமிழ் ஒழிக என்று கூறிக் கொண்டு அரசியல் நடத்த முடியும். பத்திரிக்கையும் நடத்த முடியும் (புஷ்பத்தின்பெயர் கொண்ட பத்திரிக்கையை தாக்குகிறார்). தமிழ் பகைவர்களின் மனம் குளிரும்படி இளங்கோவன் பேசியிருப்பதைபொறுத்துக் கொள்ள முடியாது.
காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் காங்கிரஸில் வழக்கில் இருந்த அக்ராசனர் என்ற வார்த்தை கமிட்டி தலைவர் என்று மாறியது.பஸ் என்பதை பேருந்து என்று மாற்றியதால், பேருந்துகள் தண்ணீரில் போகுமா, அல்லது டயர் இல்லாமல் போகுமா என்றுஅப்போது யாரும் கேட்கவில்லை.
வேதாசலம், மறைமலை அடிகள் ஆனார். நாராயணசாமி ,டுஞ்செழியன் ஆனார். ராமையா, அன்பழகன் ஆனார்.அப்போதெல்லாம் இந்தப் பெயர் மாற்றம் சோறு போடுமா என்று யாரும் கேட்கவில்லை.
பெரியாரின் பேரன் என்று பீற்றிக் கொள்கிற, சொல்லின் செல்வர் சம்பத்தின் பிள்ளை என்று சொல்லிக் கொள்கிறஇளங்கோவனுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.
திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியின் 30வது மாநாடு பெரியார் தலைமையில் நடந்தபோது அவர் பேசுகையில்,மக்களுக்கு வேண்டப்படும் முக்கியமான பற்றுக்களில் தலையாய பற்று மொழிப் பற்றாகும். மொழிப் பற்று இல்லாதவன் தேசப்பற்று இல்லாதவனாகிறான்.
ஆதலால் தமிழர்களுக்கு தாய் மொழிப் பற்று பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.வங்காளிகளுக்கு வங்க மொழியில் பற்று உண்டு. ஆந்திரனுக்கு தெலுங்கு மொழியில் பற்று உண்டு. ஆனால்தமிழர்களுக்குத்தான் தமிழ் மொழி மீது பற்று இல்லை. தாய் மொழியில் பற்று செலுத்தாதவரை தமிழர்கள் முன்னேற்றம் அடையமாட்டார்கள் என்று பேசினார் பெரியார்.
தமிழ் மொழி சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் பெரியார். பெரியாரின் பேச்சுக்களை இளங்கோவன் படிக்க வேண்டும்.
1971ம் ஆண்டு முதல் காவிரிப் பிரச்சினை இருந்து வருகிறது. இருந்தபோதிலும் கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் தனதுஉரிமையை தமிழகம் இழந்து வருகிறது, பெரும் நஷ்டத்தையும் சந்தித்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, காவிரிப் பிரச்சினை தொடர்பாக முதல்வருடன் ஒத்துழைக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் தயாராகவே உள்ளன. இதை நான் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை.பத்திரிக்கைகள் வாயிலாகவே அவருக்கு கோரிக்கை விடுக்கிறேன். காவிரில் நீர் பெற அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக பெரும்பாலானவர்கள் சந்தோஷமடைந்துள்ளனர். 5 சதவீதம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.ஆனால் 95 சதவீதம் பேர் வரவேற்றுள்ளனர். தொடர்ந்து லாபம் அடைந்தவர்கள்தான் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளனர்என்றார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications