சினிமா, டிவியில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அக்டோபர் 2ம் தேதி முதல் சினிமா, டெலிவிஷன் தொடர்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் புகைப்பிடிக்கும் காட்சிகளால் அதைப் பார்க்கும் இளைஞர்கள் மற்றும்சிறுவர்கள் கெட்டுப் போய்விடுகிறார்கள் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது.

எனவே சினிமாக்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்தது. மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி தான் இந்த பிரச்சாரத்தை முன்னின்று நடத்தி வந்தார்.

இதற்கு சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந் நிலையில் சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது தடை செய்யப்பட உள்ளதாக மத்திய நலத்துறைஅமைச்சகம் அறிவித்தது. மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு சினிமா உலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்கும்படி செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு,சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கடிதம் எழுதினார்.

இந் நிலையில் அமைச்சர்கள் ஜெய்பால் ரெட்டியும், அன்புமணியும் நேற்று இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். இதன்முடிவில் புகைப் பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இது பற்றி ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிப்பதில் இருவேறுகருத்துக்கள் இல்லை. புதிய படங்களைப் பொறுத்தவரை அக்டோபர் 2ம் தேதிக்குப் பிறகு இந்தக் காட்சிகள் கட்டாயம்இடம்பெறக் கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+