இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்: திருமாவளவன் உண்ணாவிரதம்
சென்னை:
இலங்கை அரசுடன், இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதைக் கண்டித்து வரும் 28ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் அவர் முடிவுசெய்துள்ளார்.
இத்தகைய சூழலில், இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்புக்கு பயிற்சி அளிப்பது, ராணுவ ரீதியில் உதவுவது என இந்தியஅரசுடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.
இந்த ஒப்பந்தம் தமிழினத்திற்கு எதிரானது. தமிழர்களை அழிக்கும் முயற்சியே இது. இதை எதிர்த்தும், இந்த முயற்சியைகைவிடக் கோரியும், தமிழ் மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்க தமிழ் உணர்வாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் எனதுதலைமையில் நடந்தது.
இக் கூட்டத்தில் பாமக உள்ளிட்ட 12 அமைப்புகள் கலந்து கொண்டன.
அதில், ராணுவ ரீதியில் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துதீர்மானம் நிறைவேற்றினோம். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28ம் தேதி சேப்பாக்கம் அரசினர் விருந்தினர்மாளிகை முன் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளோம்.
எனது தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு ராமதாஸ், வீரமணி, செஞ்சிராமச்சந்திரன் ஆகியோரை அழைக்கவுள்ளேன். ஆளுனரிடமும் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications