14 மாவட்ட கலெக்டர்களுடன் மதுரையில் நரேஷ் குப்தா ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
போலி வாக்காளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாமதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டனம்,விருதுநகர், தூத்துக்குடி,கன்னியாகுமரி, திருவாரூர் ஆகிய 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர்களும் கலந்து கொண்டனர்.
போலி வாக்காளர்களை சேர்க்க மொத்தமாக விண்ணப்பம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், புகைப்பட வாக்காளர் பட்டியலை தயாரிப்பது குறித்தும்இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நாளை ஈரோட்டில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 7மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications