தென் மாவட்ட கலெக்டர்களுடன் நரேஷ் குப்தா இன்று ஆலோசனை
சென்னை:
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி தொடர்பாக தென் மண்டல மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழகத் தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இதைத் தொடர்ந்து தென் மண்டல ஆட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மதுரையில் நடக்கிறது. இதில் மதுரை, திருச்சி,திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகப்பட்டனம், பெரம்பலூர், கரூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருவாரூர்,விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதையடுத்து சனிக்கிழமை மேற்கு மண்டல மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஈரோட்டில் நடைபெறுகிறது. இதில்கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு வாக்காளர் சரிபார்ப்புப் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள்,நடைமுறைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை சோதனை செய்ய டெல்லியிலிருந்து தேர்தல் ஆணையபார்வையாளர்கள் சென்னக்கு வருகிறார்கள்.
கத்தை கத்தையாக விண்ணப்பம் பெறத்தடை:
இதற்கிடையே தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்ற சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிப் பகுதிகளில் கத்தை கத்தையாக விண்ணப்பம் பெற தேர்தல்ஆணையம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக நரேஷ் குப்தா வெளியிட்ட அறிக்கையில், சென்னை உள்பட 6 மாநகராட்சிப் பகுதிகளிலும் உள்ள 39 தொகுதிகளில் தீவிர வாக்காளர் பட்டியல்திருத்தப் பணி ஏற்கனவே நடைபெற்றது. இத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளிடப்படும்.
வரைவுப் பட்டியலில் பெயர்கள் விடுபட்டிருந்தால் சேர்க்கக் கோரி மனு செய்யலாம். போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றை நீக்கக் கோரிவிண்ணப்பிக்கலாம்.
இதற்கு முன்பு இத்தகைய ஆட்சேபங்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் அளிக்கதேர்தல் கமிஷன் அனுமதி அளித்திருந்தது.
ஆனால் தற்போது இந்த 39 தொகுதிகளிலும் அதுபோல ஒரே நேரத்தில் பெருமளவில் மனுக்களை அளிக்கக் கூடாது என்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications