சிவகங்கை கூட்டுறவு வங்கி: முடக்கலை நீக்க ஜெ கோரிக்கை
சென்னை:
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாநில அரசு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளதால் அந்த வங்கியை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றுரிசர்வ் வங்கிக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அவர் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து ப.சிதம்பரம் கூறுகையில், வங்கியின் நிதிநிலையைகருத்தில் கொண்டு தான் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், விரைவில் மத்தியக்குழு வந்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும்கூறினார்.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கிகட்டுப்பாடுகளை விதித்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக விவசாயிகள், ஊரக கைவினைஞர்கள், ஏழை எளியோர் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விவசாயிகள், சிறு முதலீட்டாளர்கள், கடனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தமிழக அரசு ரூ.12.50கோடி நிதியுதவி செய்ய தீர்மானித்துள்ளது.
இதில் ரூ. 5 கோடி மானியமாகவும், மீதமுள்ள ரூ.7.50 கோடி வங்கியின் பங்கு முதலீடுகளிலும் முதலீடு செய்யப்படும்.
இந்தக் கூடுதல் நிதியுதவி மற்றும் ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு வங்கியின் மீட்பு நடவடிக்கை மூலம் கிடைத்த ரூ.12.28 கோடி மூலம் இந்த வஙகியால் ரிசர்வ் வங்கிமற்றும் நபார்டு விதித்துள்ள நிபந்தனைகளின் படி மீண்டும் செயல்பட முடியும்.
கடந்த ஏப்ரல் 10ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நான் எழுதிய கடிதத்தில் வங்கியின் நிதிநிலையை கருத்தில் கொண்டு வங்கியின் செயல்பாடுகளை முடக்கி வைக்கக்கூடாது என்று கோரியிருந்தேன்.
வங்கியின் நிதி நிலையும் நன்றாகவே உள்ளது. வங்கியின் மதிப்பு ரூ. 2.36 கோடி அளவுக்கு உள்ளது. வங்கியின் நிகர லாபமும் அதிகரித்துள்ளது. இதனால் அந்த வங்கிமீதான முடக்கல் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications