15 ஆண்டு பழைய வழக்கில் ராபின் மெயின் கைது
சென்னை:
பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய ராபின் மெயின் 15 ஆண்டுகளுக்கு முந்தைய மோசடி வழக்கில் சிபிசிஐடிபோலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்குகளில் சபாநாயகர் காளிமுத்துவும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகஇந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந் நிலையில் ராபின் மெயினை மட்டும் சிபிசிஐடி போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர்.
கடந்த 1990ம் ஆண்டு கார் ஒன்றை வளசரவாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான ஆர்.சி.புத்தகத்தைப் பெற்றார் மெயின். பின்னர் அதே காரை ராயபுரத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலககத்தில் காட்டிஇன்னொரு ஆர்.சி. புத்தகத்தைப் பெற முயன்றார் ராபின் மெயின்.
இதுதொடர்பாக போக்குவரத்து அலுவலகம் கொடுத்த புகாரின் பேரில் ராபின் மெயின் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால்இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி போலீஸார் பின்னர் வழக்கை கைவிட்டனர்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்குக்கு தமிழக அரசு இப்போது மீண்டும் உயிர் கொடுத்துள்ளது.
இந்த வழக்கை மீண்டும் நடத்தும்படி சிபிசிஐடிக்கு உள்துறைச் செயலாளர் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டாார். இதைத்தொடர்ந்து ராபின் மெயின் மீதான புகாரை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் தற்போது அவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மெயின், சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் வங்கி மோசடியில்தொடர்புள்ளவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications