ரயில் மீது கல்வீச்சு: அதிமுக எம்எல்ஏ காயம்
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ரயில் மீது கல்வீசப்பட்டதில், ரயிலில் பயணம் செய்த அரியலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ படுகாயம் அடைந்தார்.
இதில் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த இளவழகனின் இடது கண் புருவத்தில் கல் ஒன்று தாக்கியதில் ரத்தம் பீறிட்டது. உடன் அவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துரயிலை நிறுத்தினார். டிரைவர் மற்றும் கார்டு ஆகியோர் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி செய்தனர்.
அதன்பின் 20 நிமிடம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் ரயில்வே நிலையத்திற்கு வந்தது. அங்கு எம்எல்ஏவுக்கு ரயில்வே டாக்டர் அழகேசன்முதலுதவி அளித்தார். அதன்பின் அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைஅப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து ரயில் மீது கல் வீசியவர்களை தேடிவருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications