ஆதி வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்?
சென்னை:
மோசடி மன்னன் ஆதி கேசவன் மீது இதுவரை 42 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளை தனி நீதிமன்றம் அமைத்துவிசாரிக்கலாம் என அரசுக்கு காவல்துறை பரிந்துரைக்கவுள்ளது.
ஆதி கேசவன் மீது இதுவரை 42 புகார்கள் பதிவாகியுள்ளன. சில வழக்குகளில் மட்டுமே அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.தற்போது அனைத்து வழக்குகளிலும் தனித் தனியாக அவர் கைது செய்யப்படவுள்ளார்.
அவர் மீதான வழக்குகளை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரித்தால் கால தாமதம் ஆகும் என்பதாலும், மற்ற வழக்குகளின்விசாரணையும் பாதிக்கப்படும் என்பதாலும், ஆதி மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கலாமா என்றுகாவல்துறை யோசித்து வருகிறது.
தனி நீதிமன்றம் அமைத்தால் விசாரணைக்கு எளிதாக இருக்கும் என ஆணையர் நடராஜுக்கு காவல்துறை அதிகாரிகள்பரிந்துரைத்துள்ளனர். இதுதொடர்பாக விரைவில் அரசுக்கு தனது பரிந்துரையை அனுப்புவார் நடராஜ் என்று கூறுகிறார்கள்.
இதற்கிடையே, தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பள அதிபர் தர்மராஜ் என்பவரிடம் மோசடி மன்னன் ஆதிகேசவன் ரூ. 35லட்சம்மோசடி செய்துள்ளதாக புதிய புகார் வந்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் 65 வயதாகும் தர்மராஜ். இவர் தொழிலதிபர். உப்பளம் வைத்துள்ளார். சென்னை மாநகர காவல்துறைஆணையர் நடராஜை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து இவர் ஒரு புகாரைக் கொடுத்தார்.
அதில், கடந்த 2003ம் ஆண்டு தொழில் மேம்பாட்டுக்காக ரூ. 3 கோடி கடன் பெறுவதற்காக ஆதியை அணுகியுள்ளார் தேவராஜ்.இதற்காக ரூ. 35லட்சம் கமிஷன் தொகையைப் பெற்றுக் கொண்டு வழக்கம் போல செக்கைக் கிழித்து தேவராஜ் கையில் கொடுத்துஅனுப்பியுள்ளார் ஆதி.
ரூ. 75 லட்சம் வீதம் 3 கோடி 4 செக்குகளை கொடுத்துள்ளார் ஆதி. நான் சொன்ன பிறகுதான் இவற்றை வங்கியில் போடவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆதி சொல்லுவார், சொல்லுவார் என காத்திருந்த தர்மராஜ் அவர் சொல்லுகிற மாதிரிதெரியவில்லை என்றதும் நேரில் சென்று ஆதியை சந்தித்துள்ளார்.
பணத்தைப் போடுவதாக கூறி அவரை ஆதி அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பலமுறை போய்க் கேட்டும் பலனில்லை. ஒருகட்டத்தில் தர்மராஜை அடியாட்கள் வைத்து மிரட்டியுள்ளார் ஆதி.
இதனால் பயந்து போன தர்மராஜ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இருப்பினும் ஆதியின் மிரட்டலுக்குப் பயந்து போலீஸில்புகார் கொடுக்கவில்லை.
இப்போது ஆதி கேசவன் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications