மொழிப் பிரச்சினை: கருணாநிதியை சந்திக்கிறார் இளங்கோவன்
சென்னை:
மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் பாதுகாப்பு இயக்கத்தையும், பாமகவையும்கடுமையாக சாடியதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் தலை உருட்டப்படுவதால், அவரைசந்தித்து விளக்கம் அளிக்க இளங்கோவன் முடிவு செய்துள்ளார்.
பின்னர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து மன்னிப்பு கேட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இளங்கோவன்.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் குறித்தும், பாமகவினரின் போராட்டம் தொடர்பாகவும் மிகக் கடுமையாகவிமர்சித்தும், தமிழை நக்கலடித்தும் பேசினார் இளங்கோவன்.
இது பாமகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எரியும் நெருப்பில் பெட்ரோல்ஊற்றுவது போல கருணாநிதி சொல்லித் தான் தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு எதிராக இளங்கோவன் பேசியுள்ளார்.
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் காரணமாக தமிழர்களின் வாக்குகள் ராமதாஸ் பக்கம் திரும்பி விடுமோ என்ற அச்சத்தில் தான்கருணாநிதி அதற்கு எதிராக செயல்படுகிறார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி அளிக்கப் போக,பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாநிதி, நான் எதையும் சொல்லவில்லை, இளங்கோவனை நான் தூண்டி விட வில்லை என்றுஅவசரம் அவசரமாக விளக்கம் அளித்தார். மேலும், கூட்டணியை உடைக்கும் ஜெயலலிதாவின் சதி முயற்சியே இது என்றும்அதற்கு திருமாவளவன் துணை நிற்பதாகவும் அவர் கூறினார்.
தான் எதையோ பேசப் போக அது இந்த அளவுக்கு விஸ்வரூபமெடுக்கும் என எதிர்பார்க்காத இளங்கோவன், இப்பிரச்சினையில்கருணாநிதி தலையும் உருட்டப்படுவதால் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார்.
இதையடுத்து கருணாநிதியை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளார். இன்று அல்லது நாளை அவர்கருணாநிதியை சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே நுழைவுத் தேர்வு விவகாரம் தொடர்பாக கருணாநிதிக்கும், ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இப்போது இளங்கோவனை தூண்டி விட்டுள்ளார் கருணாநிதி என்று பேச்சு எழுந்துள்ளதால், திமுக, பாமக இடையிலான கருத்துவேறுபாடு மேலும் பெரிதாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications