ஜெயலட்சுமி என்னை விபச்சாரத்துக்கு அழைக்கவில்லை: போலீஸ் சாட்சி பல்டி
திருநெல்வேலி:
போலீஸார் என் மீது போட்ட பொய் வழக்குகளால் எனது வாழ்க்கையே சீரழிந்து போய் விட்டது என நெல்லைநீதிமன்றத்தில் சிவகாசி ஜெயலட்சுமி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
நெல்லை போலீஸார் தன் மீது போட்ட விபச்சார வழக்கு பொய்யானது என்று ஜெயலட்சுமி கூறியிருந்தார்.ஜெயலட்சுமியின் இந்தப் புகாரை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறுஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் நெல்லை 4வது நீதித்துறை நநிடுவர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலட்சுமி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் நெல்லைநீதிமன்றத்தில் ஆஜராயினர்.
நீதிபதி சிவதானு முன் ஆஜரான ஜெயலட்சுமி சாட்சியம் அளிக்கையில்,
கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி கோவையிலிருந்து நெல்லைக்கு வந்தேன். இரவில் பஸ்ஸுக்காக பஸ்நிலையத்தில் காத்திருந்தபோது மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மரியரோணிக்கம் என்னை வந்துவலுக்கட்டாயமாக ஜீப்பில் அழைத்துச் சென்றார்.
முதலில் நகர காவல் நிலையத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குக்கூட்டிச் சென்றார். அங்கு என்னை அடித்து துன்புறுத்தினார்.
பின்னர் விபச்சாரம் செய்ததாக கூறி பொய் வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பினார்.
என் மீது போடப்பட்ட முதல் பொய் வழக்கு அது தான். அந்த வழக்கினால் எனது வாழ்க்கையே சீரழிந்தது. அதன்பிறகு என் மீது ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டன. அதன் பிறகு என் வாழ்க்கையில் எல்லாக்கஷ்டங்களும் ஏற்பட்டன என்று கண்ணீர் மல்க ஜெயலட்சுமி கூறினார்.
பின்னர் ஜெயலட்சுமி விபச்சாரத்துக்கு அழைத்ததாக போலீசாரால் சாட்சியாக சேர்க்கப்பட்ட கோவிந்தராஜ்என்பவர் விசாரிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் கோவிந்தராஜ் சாட்சி அளிக்கையில், ஜெயலட்சுமி யார் என்றே எனக்குத் தெரியாது. அவரை நான்பார்த்தது கூட கிடையாது. என்னை விபச்சாரத்துக்கு அழைத்ததாக அவர் மீது போலீசிடம் நான் புகார் கொடுக்கவேஇல்லை.
என் பெயரில் எழுதப்பட்ட புகாரில் நான் கையெழுத்திடவும் இல்லை. இது பொய்யான வழக்கு என்று கூறிபோலீசாரின் முகத்தில் கரியை பூசினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 11ம் தேதி நீதிபதி சிவதானு ஒத்திவைத்தார்.
டிஎஸ்பி ராஜசேகருக்கும் ஜெயலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், நெல்லை போலீசாரை விட்டு அவர்மீது விபச்சார வழக்குப் போட வைத்தார் ராஜசேகர் என்கிறது ஜெயலட்சுமி தரப்பு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications