கண்ணகி சிலை மீண்டும் வரும்: கருணாநிதி நம்பிக்கை
சென்னை:
போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கக் காரணமான தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.அதுவரை ஓய மாட்டோம் என திமு‘க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, ஒட்டுமொத்தமாக மனுக்கள் கொடுத்தால் அதை ஏற்க முடியாது என்ற நிலை முன்புஇருந்தது. பின்னர் ஏற்கலாம் என்று உத்தரவு வந்தது.அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பலர் மொத்தமாக மனுக்களைக் கொடுத்தனர்.
அதில் பலருடைய விண்ணப்பங்களில் கையெழுத்தே இல்லை. முகவரியும் சரியாக இல்லை. அதேபோல அமைச்சர்கள் சிலர்கொடுத்துள்ள மனுக்களிலும் ஏராளமான போலி வாக்காளர்கள். 18 வயதுக்குக் குறைவான பலரின் பெயர்களை இந்த போலிவாக்காளர்களில் இணைத்துள்ளனர்.
அமைச்சர்கள் கொடுத்ததாயிற்றே என்று அதிகாரிகளும் அதை மறுக்காமல் வாங்கி பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்தஅமைச்சர்கள் தண்டனைக்கு உரியவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். அதுவரை நாங்கள் ஓயப்போவதில்லை.
அனைத்துக் கட்சியினரும், பொது மக்களும் ஓரணியில் நின்று வாக்காளர் பட்டியலை சிதைக்கும் முயற்சியை முறியடிக்கவேண்டும். இந்த அரசு, முன்பு இருந்தவற்றையெல்லாம் ரத்து செய்தது, ஒழித்துக் கட்டியது. இப்போது தேர்தல் நெருங்குவதால்,ஒவ்வொன்றையும் மீண்டும் கொண்டு வருகிறது.
அந்த வகையில் மெரீனாவிலிருந்து காணாமல் போன கண்ணகி சிலையும் கூட ஒரு நாள் திரும்பி வரலாம் என்றார் கருணாநிதி.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications