ரிலையன்ஸ் சகோதரர்கள் சொத்துக்கள் பிரிப்பு
மும்பை:
ரிலையன்ஸ் நிறுவனத்தில் சகோதர்களான அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர்களிடையே நிலவி வந்தசொத்துப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் பரபரப்பாக பேசப்பட்டது. யாருக்கு, எப்படி சொத்தை பிரிப்பது என்பதில்இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.
இந் நிலையில் இந்த சொத்துப் பிரச்சினை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கித் தலைவர் காமத்தின் முயற்சியின்பேரில் இருவரும் சொத்துக்களை சுமுகமாக பிரித்துக் கொள்வது என முடிவு செய்துள்ளனர். தனது மகன்களிடையே ஏற்பட்டுள்ளசொத்துப் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு காமத்திடம் அவர்களது தாயார் கோகிலா பென் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் படி ரிலையன்ஸின் முக்கிய நிறுவனமான ஆர்ஐஎல் மற்றும் அதன் பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான ஐபிசிஎல் ஆகியவைமுகேஷ் அம்பானிக்கும், ரிலையன்ஸ் இன்போ காம், ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் எனர்ஜி ஆகியவை அனில்அம்பானிக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதங்களாக அம்பானியின் வாரிசுகளிடையே நடந்து வந்த இந்த சொத்துப் பிரச்சினை இப்போது முடிவுக்குவந்துள்ளது. இந்த தகவலை இவர்களது தாயார் கோகிலா பென் இன்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது இரு மகன்களான முகேஷ் மற்றும் அனில் ஆகியோர்களுக்கு இடையே நிலவி வந்தசொத்துப் பிரச்சினையை எனது கணவர் திருபாய் அம்பானியின் பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் சுமுகமாக தீர்த்துவைத்துள்ளேன்.
இனிமேல் ரிலையன்ஸ் மற்றும் ஐபிசிஎல் நிறுவனங்களுக்கு முகேஷும், ரிலையன்ஸ் இன்போ காம், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும்ரிலையன்ஸ் கேபிடல் ஆகியவற்றுக்கு அனிலும் பொறுப்பு வகிப்பார்கள். எனது கணவர் கடுமையாக உழைத்து இந்த நிறுவனத்தை வளர்த்தது போல எனது மகன்களும் இந்த நிறுவனத்தை மேலும்முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனறார்.சுமுக தீர்வு மகிழ்ச்சியளிக்கிறது-ப.சிதம்பரம்:இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், அம்பானி சகோதரர்களுக்கு இடையே நிலவி வந்த சொத்துப்பிரச்சினை சுமுகமாக முடிந்ததில் மத்திய அரசுக்கும், எனக்கும் மகிழ்ச்சி. 30 லட்சம் பங்கு முதலீட்டாளர்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த நல்ல முடிவை அவர்கள் எடுத்துள்ளார்கள்.
அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் தங்களது நிறுவனங்களை மேலும் வளர்க்க பாடுபடவேண்டும். இருவருக்கும்இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டில் மத்திய அரசு எந்தவிதத்திலும் தலையிடாது என்றார்.
இதற்கிடையே ரிலையன்ஸ் நிறுவனங்களின் போர்டு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. முகேஷ் அம்பானி தலைமையில்நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறுவனங்கள் பிரிக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனில் அம்பானிகலந்து கொள்ளவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications