நான் தமிழ் வெறியன் அல்ல: இளங்கோவன்
தர்மபுரி:
தமிழ் மீது எனக்குப் பற்று உண்டு, ஆனால் வெறி கிடையாது என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெரியாரின் பேரன், சம்பத்தின் மகன் என்பதில் எனக்குஎப்போதும் பெருமை உண்டு. நான் எந்த இடத்திலும் தமிழைப் படிக்கக் கூடாது என்றோ, தமிழுக்கு எதிராகவோ கருத்துகூறியதில்லை. எனக்கு தமிழ் மீது பற்று உண்டு, ஆனால் வெறி கிடையாது.
தமிழுக்கு செய்யும் உண்மையான தொண்டு என்பது, திமுக தலைவர் கருணாநிதி செய்வது போல பாமரரும் புரிந்து கொள்ளும்வகையில் திருக்குறளுக்கு எளிய நடையில் உரை எழுதுவது, மற்ற தமிழ் இலக்கியங்களையும் மக்கள் புரிந்து கொள்ளும்வகையில் விளக்க உரை எழுதுவது என்பதாகும்.
தமிழ் மொழி பற்றி எழுந்த விவாதம் ஒரு பிரச்சினையே அல்ல. திருமாவளவன் இதை ஒரு பிரச்சினையாக்கி, திமுக தலைவர்கருணாநிதி தான் இதற்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். இது மிகவும் வருந்துவதற்குரியதாகும்.
திருமாவளவன் என்ன தான் முயன்றாலும் எங்களது கூட்டணியை அவரால் உடைக்க முடியாது. சிறு விரிசல் கூட வராதுஎன்பதை உறுதியாகசொல்லிக் கொள்கிறேன்.
தமிழ் பாதுகாப்பு இயக்கம் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. நான் ஆங்கிலத்தின் அவசியம் குறித்து பேசுகிறேனே தவிரதமிழ் மொழி தேவையில்லை என்று பேசவில்லை.
டாக்டர் ராமதாஸ் என்னைப் பற்றி சில தனிப்பட்ட விமர்சனங்களை செய்திருக்கிறார். அவர் மூத்த அரசியல்வாதி, அனுபவசாலி.எனவே அவருடைய விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தமிழ் மட்டுமல்லாமல் கூடுதலாக அதிக மொழிகளைக் கற்றால் நமது இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இளங்கோவன்.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை:
இந் நிலையில் இளங்கோவனை கடுமையாக பழித்தும், விமர்சித்தும், ஆபாச வார்த்தைகள் அடங்கிய போஸ்டர்கள் சென்னைநகரின் பல பகுதிகளில் இன்றும் ஒட்டப்பட்டன.
இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர். இதனால் இளங்கோவன்ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யவும், இளங்கோவன் எதிர்ப்பாளர்களுக்கு பதிலடிகொடுப்பது எப்படி என்பது குறித்து முடிவு செய்யவும் அவர்கள் இன்று சென்னையில் கூடி ஆலோசித்தனர்.
தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்த குமார் தலைமையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்தஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications