இலங்கைக்கு ஆயுதங்களா?: மீண்டும் பிரதமரை சந்தித்தார் வைகோ
டெல்லி:
இலங்கையுடன் எந்தவிதமான பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் இந்தியா செய்து கொள்ளக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் சமீபத்தில் இலங்கை சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங் அங்கு பேட்டியளிக்கையில், இலங்கையுடன்ராணுவ ரீதியிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.
இதை பிரதமரிடம் எடுத்துக் கூறி நட்வர்சிங்கின் கருத்தை மத்திய அரசின் கருத்தாக நினைக்கவில்லை. உங்களதுஉறுதிமொழியிலிருந்து விலக மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தேன்.
மேலும், இலங்கைக்கு வழங்கப்படும் எந்த ராணுவ உதவியையும் அது இலங்கைத் தமிழர்களை அழிக்கவும், நசுக்கவுமே அந்தநாடு பயன்படுத்திக் கொள்ளும் என்பதையும் பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்று வைகோ கூறியுள்ளார்.
இலங்கையுடன், இந்தியா ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பாமக, தமிழ் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்டவையும்கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுதம் ஏந்த மாட்டோம்: ஈபிஆர்எல்எப்
இதற்கிடையே இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) கோரிக்கை விடுத்துள்ளது.
பத்மநாபா நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று சென்னை வந்த இந்த அமைப்பின் கனடாநாட்டு பொறுப்பாளர் ஞானம், இலங்கையின் பிராந்திய பொறுப்பாளர் ஸ்டேனிஸ் ஆகியோர் கூறுகையில், எங்களுக்கு ஆயுதப்போராட்டத்தின் மீது இனி நம்பிக்கை இல்லை. இனிமேல் ஆயுதம் ஏந்த மாட்டோம்.
இலங்கையில் சுனாமி நிவாரணப் பணிகளை அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இலங்கை அரசு செயல்படுத்தவேண்டும்.
நாங்கள் இந்தியாவின் நண்பர்களாகவே இருக்கிறோம். இலங்கையில் நடைபெறும் கொலைகளை தடுத்து நிறுத்த இந்தியாமுன்வர வேண்டும். தமிழ் மக்களுக்கு ஜனநாயக ரீதியிலான தீர்வு காண இந்தியாவும், இந்திய மக்களும் உதவ வேண்டும்என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications