பலத்தைக் காட்ட மாநாடு நடத்துகிறார் இளங்கோவன்
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க அடுத்த மாதம் காமராஜர் பிறந்த நாள் என்ற பெயரில் மாநாடும்,பேரணியும் நடத்த இளங்கோவன் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதில் தனது ஆதரவாளர்கள்பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது ஆதரவாளர்களோடுசென்னையில் இளங்கோவன் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநில வர்த்தக காங்கிரஸ்தலைவர் வசந்தகுமார் (குமரி அனந்தனின் தம்பி), தென் சென்னை, திருவள்ளூர், சேலம், திருச்சி, கடலூர்,
வேலூர் மேற்கு, விருதுநகர், காஞ்சிபுரம், நெல்லை, மதுரை மேற்கு, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ்தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய இளங்கோவன் ஆதரவாளர்கள் பலரும் தங்களது பலத்தை நிரூபித்தே ஆக வேண்டும்.அப்போது தான் பல்வேறு தரப்பினரின் வாயை அடைக்க முடியும் என்று இளங்கோவனுக்கு ஆலோசனைகூறினர்.
இதையடுத்து ஜூலை 15ம் தேதி சென்னையில் காமராஜர் பிறந்த நாள் என்ற பெயரில் பேரணி, பொதுக்கூட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு531 பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் என் மீது அன்பு கொண்ட பலருக்கு பொறுப்புவழங்கப்படவில்லை.
மாறாக, காங்கிரஸ் கட்சிக்கு சற்றும் சம்பந்தமே இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது என் மீது அன்புகொண்ட மற்றவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தான் இன்று விவாதித்தோம்.
தங்களது பதவியை ராஜினாமா செய்து நமது பலத்தைக் காட்டுவோம் என்று கூட்டத்தில் கலந்து காண்டவர்கள்கோபத்துடன் தெரிவித்தனர். நான் அவர்களை சமாதானப்படுத்தினேன். கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம்இதுகுறித்து தெரிவித்துள்ளேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சோனியா காந்தி அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதே நமதுமுக்கிய பணி. இதை யாரும் மறந்து விடக் கூடாது என்பதை எனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளேன்.
ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இதையொட்டிபேரணி, பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் டெல்லி தலைவர்களை அழைத்துள்ளோம்.
இந்த பொதுக்கூட்டம், பேரணியில் உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் லட்சோப லட்சம் பேர் கலந்துகொள்வார்கள்.
ஜூலை 15ம் தேதி நடைபெறப் போகும் காமராஜர் பிறந்த நாள் விழாவை தமிழக வர்த்தக காங்கிரஸும், தென்சென்னை மாவட்ட காங்கிரஸும், கட்சியின் உண்மையான தொண்டர்களும் சேர்ந்து தான் நடத்துகிறார்கள். இதைகோஷ்டி மாநாடு என்று கருத முடியாது.
நான் நடத்தியுள்ள இந்த கூட்டத்தால் காங்கிரஸ் கட்சியில் பிளவோ அல்லது கோஷ்டிப் பூசலோ வராது.இப்படியாவது காங்கிரஸ் கட்சியில் கூட்டம் நடக்கிறதே என்று பொதுமக்கள் சந்தோஷம் தான் படுவார்கள். இதைரகசிய கூட்டம் என்று கூற முடியாது. நாங்களும் காங்கிரஸில் தான் இருக்கிறோம்.
காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. என்னை தமிழனே இல்லை என்று சொல்லியுள்ளார். நல்லவேளை என்னை மனிதனேஇல்லை என்று கூறாமல் விட்டாரே. அவர் தனது பெயருக்கேற்ப அந்தப் பணியை மட்டும் செய்தால் போதும்.
தொல் திருமாவளவன் பேசுவதை நான் கருத்தில் கொள்ளவில்லை. அவர் விஷமத்தனமாக பேசி வருகிறார்.தமிழுக்கு எதிராக நான் ஒரு போதும் பேசவில்லை. ஆங்கில மொழியின் அவசியம் குறித்துத் தான் பேசினேன்என்றார் இளங்கோவன்.
அந்தியூரில் பரபரப்பு தட்டிகள்:
இதற்கிடையே இளங்கோவன் சார்ந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் அவரைக் கடுமையாக சாடி தட்டிகள்வைக்கப்பட்டன. அவரது படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், கடுமையான வாசகங்கள் அடங்கியதட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.
அரசு மருத்துவமனை எதிரே வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழின துரோகிஇளங்கோவா, இந்த செருப்படி போதுமா என்பன போன்ற பல வாசகங்கள் தட்டியில் இடம் பெற்றிருந்தன.
இந்த தட்டிகளால் ஆத்திரமடைந்த காங்கிரஸார் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தினர். அப்பகுதியில்பரபரப்பு நிலவுவதால் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications