நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடல்
டெல்லி:
கமிஷன் தொகையை உயர்த்தக் கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டன.
இதை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் ஒரு நாள் மூடப்பட்டன. ஆனாலும் இவர்களதுகோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மேலும் ஒரு நாள் போராட்டம் நடத்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முடிவுசெய்தனர். இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் இந்தப் போராட்டம் தொடங்கியது.
இதனால் டெல்லி, மும்பை, கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னைஉட்பட அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் மொத்தமுள்ள 375ல் 24பங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
எண்ணை நிறுவனங்கள் நடத்தும் ஒரு சில பெட்ரோல் பங்குகள் மட்டும் திறந்துள்ளன. இதனால் ஏராளமானோர் இங்கு நீண்டவரிசையில் காத்திருந்து தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி சென்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து அகில இந்திய பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத் தலைவர் அஷோக் பட்வார் கூறுகையில், இன்றுநாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் எங்களது ஒற்றுமையை காட்டி விட்டோம்.
கமிஷன் தொகையை உயர்த்தக் கோரி மத்திய அரசிடமும், எண்ணை நிறுவனங்க ளிடமும் நாங்கள் பலமுறை கோரிக்கைவிடுத்தோம். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகும் எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ஜூலை மாதம் 18ம் தேதி முதல் காலவரையற்றபோராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இது குறித்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்களது நிறுவனத்தின் கீழ் செயல்படும்பெட்ரோல் விற்பனை நிலையங்களில் போதுமான இருப்பு உள்ளது. ஒரு நாள் தேவையை நாங்கள் சமாளித்து விடுவோம்என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications