சினிமாவில் நோ ஸ்மோக்கிங்: நீதிமன்றம் செல்லும் திரையரங்க உரிமையாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திரைப் படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப் போவதாக தமிழ்திநாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தமிழ் திரைத் துறை தற்போது நல்ல நிலையில் உள்ளது.முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளது. திரையரங்க வருமானம் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

திரையரங்கங்கள் நலிவடைய யாரையும் குறை சொல்லக் கூடாது. திரையரங்க உரிமையாளர்கள்தான் அதற்குபொறுப்பேற்க வேண்டும். காலத்தின் மாற்றத்திற்கேற்ப, வளர்ந்து வரும் முன்னேற்றங்களுக்கேற்ப, ரசிகர்களின்விருப்பத்திற்கேற் திரையரங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

அப்போதுதான் திரையரங்குகளுக்கு அதிக அளவில் ரசிகர்களை வரவழைக்க முடியும்.

இது மல்டிபிளக்ஸ் காலம். சேலத்திலும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுபோலஅனைத்து வசதிகளையும் கொண்டதாக திரையரங்குகளை மாற்ற வேண்டும்.

திரைப்படங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்புக்குரியது அல்ல. ஒருவனை நல்லவனாககாட்ட வேண்டும் என்றால் ஒரு தீயவனைக் காட்டித்தான் அந்த நல்லவனைக் காட்ட முடியும்.

தீயவன் என்று வரும்போது புகை பிடிப்பது, மது அருந்துவது, பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்றகாட்சிகளைக் காட்டாமல் எப்படி அவனைத் தீயவன் என்று கூற முடியும்?

எனவே சினிமா காட்சிகளில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை அல்ல. இதைஎதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்றார் ராமநாதன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+