ராணி மேரி : ஸ்டாலின் மீதான வழக்கு ஜூலை 21க்கு ஒத்திவைப்பு
சென்னை:
ராணி மேரி கல்லூரி விவகாரம் தொடர்பான திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின்உள்ளிட்டோர் மீதான வழக்கு ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
இதுதொடர்பாக ஸ்டாலினை நள்ளிரவில் கைது செய்வதற்காக வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்குப்போலீஸார் போனபோது, போலீஸார் மீது தாக்குதல் நடத்தி அவர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகஸ்டாலின் உள்ளிட்ட 13 பேர் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு முதலில் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னைசெஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 7வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஸ்டாலின் உள்ளிட்ட 8 பேர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில்இன்று ஒரு நாள் மட்டும் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரி மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்ற பொறுப்பு நீதிபதி ஜெயபால் வழக்கு விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்துஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications