பாமக விவகாரம்: கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.
இளங்கோவன் பேச்சின் பின்னணியில் கருணாநிதி இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதுதிமுக கூட்டணியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவனுக்கு கருணாநிதி உடனடியாக மறுப்பு தெரிவித்தாலும்கூட இளங்கோவனை கடுமையாக அவர் கண்டிக்காதது பாமக தரப்பில் பெருத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதன் காரணமாக திமுக, பாமக இடையே மனக் கசப்பு அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியில்தற்போது திமுக கூட்டணிக் கட்சிகளில் திமுக மட்டுமே அதி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மற்ற கட்சிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை.
மேலும், சமீபத்தில் கருணாநிதியின் மூத்த சகோதரி பெரிய நாயகி அம்மையார் இறந்தபோது ராமதாஸ் அஞ்சலி செலுத்தவரவில்லை. அவருக்குப் பதில் ஜி.கே.மணியும், ஏ.கே.மூர்த்தியும் தான் வந்தார்கள்.
இதேபோல, கரூரில் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்திலும் பாமக கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது. பலமுறை பாமகவை கூட்டத்திற்கு வரவழைக்க முயன்ற போதும், கூட்டத்தில் பங்கேற்க கட்சி மேலிடம் தங்களுக்கு அனுமதிதரவில்லை என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டதாம்.
இப்படி சிறிதும், பெரிதுமாக திமுக, பாமக இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று திடீரென மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பெரிய நாயகி அம்மையார் மறைவு குறித்து துக்கம் விசாரிக்கவே வைகோவந்ததாக கூறப்பட்டாலும் கூட, பாமக விவகாரம் குறித்தும் வைகோவிடம் கருணாநிதி மனம் திறந்து பேசியதாக கூறப்படுகிறது.
பாமகவின் போக்கு சமீப காலமாகவே எடக்கு மடக்காக இருப்பதாக வைகோவிடம் கூறி கருணாநிதி வேதனை தெரிவித்தாராம்.அத்தோடு, கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் தேர்தலிலும் பாமகவினர் சரியான முறையில் வேலை செய்யவில்லை.
அவர்களது வாக்கு வங்கியிலிருந்து முழுமையான வாக்குகள் திமுக வேட்பாளருக்குக் கிடைக்கவில்லை என்றும் கருணாநிதி,வைகோவிடம் கூறியதாகத் தெரிகிறது.
நேற்று காலை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கை விவகாரம் குறித்து பேசிய வைகோ, மாலையில்கருணாநிதியை சந்தித்து பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications