பெங்களூரில் கதை, வசனம் எழுதும் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இயக்குநர் ராம. நாராயணனின் செல்லக்கிளி என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதுவதற்காக திமுக தலைவர் கருணாநிதிபெங்களூர் சென்றுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாளுடன் திங்கள்கிழமை காலை திடீரென பெங்களூர்புறப்பட்டுச் சென்றார். விமானம் மூலம் சென்ற அவர்களை விமான நிலையத்தில் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமிஉள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

ஒரு வாரம் பெங்களூரில் தனது மகள் செல்வி வீட்டில் கருணாநிதி தங்குகிறார். கருணாநிதியின் பெங்களூர் பயணம்எதற்காக என்று முதலில் தெரிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது இது குறித்துத் தெரிய வந்துள்ளது.

இயக்குநர் ராம. நாராயணன் செல்லக்கிளி என்ற புதிய படத்தை இயக்குகிறார். அந்தப் படத்திற்கு கதை, வசனம்எழுதவிருக்கிறார் கருணாநிதி. இதற்காகவே தற்போது பெங்களூருக்குப் பயணமாகியுள்ளார். இயக்குநர் ராம.நாராயணனும் பெங்களூருக்கு சென்றுள்ளார்.

வசனத்தை முழுமையாக முடித்த பிறகே கருணாநிதி சென்னைக்குத் திரும்புவார். சமீபத்தில் வெளியான ராம.நாராயணனின் மண்ணின் மைந்தன் படத்திற்கும் கருணாநிதி வசனம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அவதூறு வழக்கு ஒத்திவைப்பு:

சங்கரராமன் கொலைவழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்தது தாமதமான நடவடிக்கை, வேண்டுமென்றே அவரது கைது தாமதப்படுத்தப்பட்டதாககருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கருணாநிதி மீது தமிழக அரசு அவதூறு வழக்கைத் தொடர்ந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், தமிழக அரசுக்கும் களங்கம்கற்பிக்கும் வகையில் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை தன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபாலன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை ஆகஸ்ட்மாதம் 19ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கருணாநிதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+