டெல்லியில் இன்று காவிரிக் கண்காணிப்புக் குழு கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குறுவை சாகுபடிக்காக தமிழக விவசாயிகள் தண்ணீர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லியில் இன்றுமத்திய நீர்வளத்துறை செயலாளரின் தலைமையில் காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடக்கிறது.இக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நாராயணன் தலைமையிலான குழு நேற்றுமாலை டெல்லி சென்றது.

கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவ மழை நன்றாக பெய்து வருவதால், காவிரியில் உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும் எனஇன்றைய கூட்டத்தில் தமிழகம் கோரிக்கை விடுக்கவுள்ளது.

இக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும்,அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.

இன்றைய கூட்டத்தில் கர்நாடகம் மற்றும் தமிழக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆராயப்படுகிறது. இக்கூட்டத்தின்போது, கர்நாடகத்தில் தற்போது தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கபிணி அணைக்கு நீர் வரத்துஅதிகரித்துள்ளது. கபிணி தவிர முக்கிய அணைகளிலும் கணிசமான அளவு நீர் இருக்கிறது. எனவே தமிழக குறுவை சாகுபடிக்குஉரிய நீரை கர்நாடகம் திறந்து விடக் கோரி வலியுறுத்த தமிழகம் முடிவு செய்துள்ளது.

குறுவை சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் போதிய நீர் இருப்பு இல்லாததால்கடந்த 3 ஆண்டுகளாக அணை உரிய தேதியில் திறக்கப்படவில்லை. இந்த ஆண்டும் அணை திறப்பு தள்ளிப் போயுள்ளது.இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுதொடர்பாக போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால் மழை இல்லாததால் தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடகமுதல்வர் தரம்சிங் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் காவிரிக் கண்காணிப்புக் குழு கூடியுள்ளது. இக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு குறித்து பிரதமரிடம் அறிக்கைசமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடைபெறும் என்றுதெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+