இளங்கோவனுக்கு போட்டியாக வாசன் கோஷ்டி கூட்டம்ா
சென்னை:
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னையில் நடத்தப் போகும் காமராஜர் பிறந்த நாள் விழாவுக்குப்போட்டியாக ஜி.கே.வாசன் ஆதரவாளர்களும் தனியாக காமராஜர் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் கரை தெரியாமல் வெள்ளமென பாய்ந்து ஓடிக் கொண்டுள்ளது.
மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோஷ்டிக்கு எதிராக வாசன் கோஷ்டியினரும் பதிலுக்குப்பதில், ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது செய்து கொண்டுள்ளனர்.
சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ள இளங்கோவன் கோஷ்டியினர், தங்களது பலத்தை மற்றவர்களுக்குநிரூபிப்பதற்காக சென்னையில் காமராஜர் பிறந்த நாளை பெரிய மாநாடு போல தடபுடலாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு தனிக் கட்சி மாநாட்டைப் போல இந்த மாநாட்டை நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். இதற்குகாங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக வாசன் கோஷ்டியினர் கடுப்படைந்துள்ளனர். இளங்கோவனுக்கு சரியான பதிலடி கொடுக்க அவர்கள்திட்டமிட்டுள்ளனர்.
இளங்கோவன் மாநாடு நடத்தும் அதே நாளில் போட்டி கூட்டம் நடத்த வாசன் தரப்பு முடிவு செய்துள்ளது. இளங்கோவன்கோஷ்டியின் மாநாட்டை தென் சென்னை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மங்கள்ராஜும், மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர்வசந்தகுமாரும் ஏற்பாடு செய்துள்ளனர்.
வாசன் தரப்பு கூட்டத்தை மத்திய சென்னை காங்கிரஸ் தலைவர் கோவிந்தசாமி ஏற்பாடு செய்துள்ளார். வாசன் கோஷ்டியினரின்கூட்டத்தை அயனாவரத்தில் நடத்தவுள்ளனர்.
இரு தரப்பினரும் தங்களது செல்வாக்கை நிரூபிக்க டெல்லியிலிருந்து பல்வேறு தலைவர்களை அழைக்க முடிவு செய்து,அதற்கான வேலைகளை தொடங்கி விட்டார்கள்.
இப்படி, இளங்கோவனும், வாசனும் முஷ்டி தட்டிக் கொண்டு களத்தில் குதித்திருப்பதால் காங்கிரஸ் வட்டாரத்தில் மீண்டும்பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
இவர்களுக்குப் போட்டியாக நாமும் எதையாவது நடத்தலாமா என்று மற்ற கோஷ்டிகளின் தலைவர்களும் தற்போதுசிந்திப்பதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications