கண்டதேவி: தலித் வீடுகளில் துக்கம் அனுஷ்டிப்பு
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி, சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் தலித் மக்களை கலந்து கொள்ள விடாமல்போலீசாரும் முக்குலத்தோர் சமூகத்தினரும் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டதேவி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து துக்கம் அனுஷ்டித்து வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு யாரும் வீட்டை விட்டு வரக்கூடாது, கோவிலுக்குப் போகக் கூடாது என்று கூறி தடுத்து விட்டதாகவும், மீறி செல்ல முயன்றவர்கைள கைது செய்துவிட்டதாகவும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் தெரிவிக்கிறார்கள்.
முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு ஆதரவாக நடந்து கொண்டு போலீஸார் அடக்குமுறையைக் கையாண்டதாகவும், இதனால்தாழ்த்தப்பட்ட மக்கள் முழுமையான அளவில் தேரோட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் ஒப்புக்கு 25தாழ்த்தப்பட்ட வகுப்பினரை வைத்துக் கொண்டு தேரோட்டம் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த பாரபட்சப் போக்கைக் கண்டித்து கண்டதேவி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் வீடுகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பாப்பாபட்டி: பொடா கைதிகள் உண்ணாவிரதம்
இதற்கிடையே பாப்பாபட்டி, கீரிப்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மத்தியசிறையில் உள்ள பொடா கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்ட்ட பொடா கைதிகள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் உள்ளிட்ட தலித் பஞ்சாயத்துக்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஅவர்கள் கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications