சுனாமி தற்காலிக குடியிருப்பில் மீண்டும் தீவிபத்து: ஒருவர் பலி
சென்னை:
சென்னை திருவொற்றியூர் அருகே கார்கில் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி தற்காலிக குடியிருப்பில் மீண்டும் தீவிபத்துஏற்பட்டது. இதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கார்கில் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான தற்காலிக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு பல்லாயிரணக்கானோர் தங்கியுள்ளனர்.
இந்த தற்காலிக குடியிருப்பில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது இதுவரை உறுதியாகத்தெரியவில்லை. இருப்பினும் தாங்கள் இங்கு இருப்பதை விரும்பாத சிலர்தான் இவ்வாறு வேண்டுமென்றே தீ வைப்பதாககார்கில் நகரில் குடியிருப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந் நிலையில், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் இப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரம்குடிசைகள் வரை எரிந்து சாம்பலாகிவிட்டன. இதில் ஒருவர் பலியாகிவிட்டார்.
10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. மூன்றரைமணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications