Jayas case posted for orders on June 27
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகளை சேர்த்து விசாரிப்பதா அல்லது தனித்தனியாக விசாரிப்பதா என்பது குறித்த தீர்ப்பு வழங்குவதை வருகிற 27ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக பெங்களூர் தனி நீதிமன்றநீதிபதி பச்சாப்பூரே இன்று அறிவித்தார்.
இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க ஜெயலலிதா கோரி வருகிறார்.
இதுதொடர்பாக தனி நீதிமன்றத்தில் அவர் மனு செய்துள்ளார். இரு வழக்குகளையும் எப்படி விசாரிக்க வேண்டும் என்பதுகுறித்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விளக்கம் கேட்டு வருமாறு ஜெயலலிதா தரப்புக்கு தனிநீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரே அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இளவரசி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து பெங்களூர் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந் நிலையில் நேற்று (புதன்கிழமை) பெங்களூர் நீதிமன்றத்தில், இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பது குறித்த தனதுதீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி பச்சாப்பூரே கூறியிருந்தார்.
இதன்படி, நேற்று நீதிமன்றம் கூடியதும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இளவரசிமுதலில் தாக்கல் செய்த மனுவின் மீதே தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இரு வழக்குகள்குறித்து இனிமேல்உயர்நீதிமன்றத்தில் அணுக தேவையில்லை என்றும் அதை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்றும்தீர்ப்பளித்திருந்தது என்றார்.
அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி, இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்றார்.அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, எதிர்த்தரப்பு வாதங்களை கேட்பது உங்கள் முடிவை பொறுத்தது என்றுநீதிபதியிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து வாதத்தை நாளை கேட்பதாக நீதிபதி பச்சாப்பூரே அறிவித்தார்.
இதன்படி இன்று வாதம் நடைபெற்றது. அப்போது தினகரனின் வழக்கறிஞர் நரேந்திரா கூறுகையில், தினகரன் சார்பில் எங்களதுமூத்த வழக்கறிஞர் குமார் தான் வாதிட வேண்டும். அவரால் இன்று வர இயலவில்லை. இதனால் விசாரணையை ஒரு நாளைக்குஒத்தி வைக்க வேண்டும் என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி பச்சாப்பூரே, விசாரணையை ஒத்தி வைக்க முடியாது. இது குறித்த தீர்ப்பை வருகிற 27ம் தேதிஅறிவிக்க உள்ளேன். அன்று வேண்டுமென்றால் நீங்கள் வாதிடலாம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications