எனது பதவிக்கு சிகரெட் கம்பெனிகளால் ஆபத்து: அன்புமணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் என்னை மத்திய சுகாதார அமைச்சர் பதவியிலிருந்துதுரத்த சதி செய்து வருகின்றன. திரைத் துறையினரை எனக்கு எதிராக போராட்டம்நடத்த அவர்கள் தூண்டி விடுகிறார்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.

திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு அன்பு மணி தடையைஅறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் இந்த தடைஅமலுக்கு வருகிறது.

இதற்கு இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிகரெட்தயாரிப்புக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படாத நிலையில் சினிமாவில் மட்டும்சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு தடை விதிப்பது நியாயம் அல்ல என்றுதிரைத் துறையினர் கூறி வருகிறார்கள்.

இந் நிலையில் திரைத் துறையினரைத் தூண்டி விட்டு தன்னை பதவியிலிருந்து அகற்றசிகரெட் தயாரிப்பாளர்கள் தீவிரமாக முயற்சித்து வருவதாக அன்புமணி திடீரெனகுற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி கூறுகையில், திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்றகாட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிகரெட் தயாரிப்பாளர்கள்கோபமடைந்துள்ளனர். தங்களது விற்பனை பாதிக்கப்படும் என அவர்கள்கருதுகிறார்கள்.

இதனால் திரைத் துறையினரை எனக்கு எதிராக தூண்டி விட்டு என்னைப்பதவியிலிருந்து அகற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன், எனது கடமையிலிருந்து பின் வாங்க மாட்டேன்.

இளைய சமுதாயத்தினரை இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து காப்பாற்றும் பொறுப்புஎனக்கு உண்டு. இளைய சமுதாயத்தினரில் 52 சதவீதம் பேர் திரைப்படங்களில் வரும்புகை பிடிக்கும் காட்சிகளைப் பார்த்துத் தான் சிகரெட் புகைக்க கற்றுக் கொள்வதாகஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே தான் திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு திரைத் துறையிடமிருந்து எதிர்ப்பு வரும்என்பது நான் எதிர்பார்த்தது தான்.

ஆனால் சமூகத்தின் மற்ற பிரிவினரிடமிருந்து இதற்கு ஆதரவு தெரிவித்து குரல்எழுப்பப்படாதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது.

பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத்தடையை அமல்படுத்துவது மாநில அரசுகளின் கையில் தான் உள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.

எனது ஒட்டுமொத்த லட்சியமே, சிகரெட் தயாரிப்பை அடியோடு ரத்து செய்வதுதான். புகையிலை சார்ந்த அனைத்துப் பொருட்களையும் தடை செய்ய வேண்டும்என்பதே எனது எண்ணம்.

இதை செய்ய எனக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி நான்கவலைப்படவில்லை. புகையிலை சார்ந்த அனைத்துப் பொருட்களும் தடைசெய்யப்பட வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்அன்புமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+